பிரசாரம் செய்ய மாட்டேன் நடிகர் யஷ் திட்டவட்டம்

16 February 2024


2019 லோக்சபா தேர்தலில், கர்நாடக மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேட்சையாக களமிறங்கினார். நடிகர் யஷ் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். சுமலதா அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, நடிகர் யஷ் செய்தியாளர் சந்திப்பில் ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.

read more at