மதுரை எய்ம்ஸ்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

Mallinithya | 30 January 2024


மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் மருத்துவமனை அமைய உள்ளது.

read more at