இன்றோடு முடியும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்.. நாளை ஜாமீன் மனு மீதான விசாரணை.. அடுத்து என்ன?

20 February 2024


சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 21 முறை அவருடைய நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களாக இவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். இவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுவதால் அவருடைய நீதிமன்றக் காவல் 22 ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

read more at