தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை..!" - தமிழ்நாடு அரசு உத்தரவு

17 February 2024


பஞ்சு மிட்டாய்களில் `ரோடமின்-பி (Rhodamine-B)' எனும் ரசாயனம் கலப்பதாகவும், இந்த ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய்களை அதிகளவில் உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வாய்பிருப்பதாவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாட்டிலும் அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்களில் ரோடமின்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் தற்போது பஞ்சுமிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

read more at