மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!

Mallinithya | 30 January 2024


மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. மாலத்தீவு அண்மைக்காலமாகவே இந்தியாவுடன் விரோத போக்கை கையாள்கிறது. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஏராளாமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மேலும், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

read more at