அஜித் சாருக்கு வில்லனா நடிக்கணும்.. அசோக் செல்வனின் ஆசை!

Mallinithya Ragupathi | 2 February 2024


நடிகர் அசோக்செல்வன் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் அவருடன் வில்லனாக நடிப்பதே தன்னுடைய ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான பேக்கப்பும் இல்லாமல் தன்னை நிரூபித்த அஜித்தின் வாழ்க்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அஜித்தின் இந்தப் பயணம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அஜித்தின் பில்லா 2 படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் அசோக் செல்வன்.

read more at