வெள்ள நிவாரணம் குறித்த விவாதம்: திமுக - பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதம்

Mallinithya Ragupathi | 6 February 2024


லோக்சபாவில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், 'தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத்தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம்' என பேசியபோது எல்.முருகன் தொடர்ந்து குறுக்கிட்டார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர்.பாலு, 'மத்திய அமைச்சர் தொடர்ந்து எனது பேச்சில் குறுக்கிடுகிறார். அவர் எம்.பி.,யாக பதவி வகிப்பதற்கே தகுதியற்றவர். அவரை வெளியே அனுப்புங்கள் என்றார். இதற்கு பட்டியலின மத்திய அமைச்சரை டி.ஆர்.பாலு தவறாக பேசியதாக பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

read more at