வணிகம்

விளாடிமிர் புதின் முக்கிய அறிவிப்பு.. பெட்ரோல் விலை உயருமா..?!

Mallinithya Ragupathi | 28 February 2024


உக்ரைன் மீது ரஷ்யா 3 ஆண்டுகளாக போர் தொடுத்து வருகிறது. இதன் நீட்சியாக ரஷ்யாவின் உள்நாட்டு தேவையைச் சமாளிக்கவும், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புகளை மேற்கொள்ளவும், மார்ச் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு பெட்ரோல் வகை எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க உள்ளது. இந்தத் தடை மூலம் சர்வதேச சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என தெரிகிறது.

பாஸ்ட்டேக் KYC ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு இறுதிக்கெடு பிப்ரவரி 29

Mallinithya Ragupathi | 27 February 2024


இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 'ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்' கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் நீங்கள் கேஒய்சி அப்பேட்டை செய்து முடிக்கவில்லை என்றால், உங்கள் பாஸ்ட்டேக் செயலிழக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் தொடக்கம்..!

Mallinithya Ragupathi | 26 February 2024


பிரதமர் மோடி டெல்லியில் நேற்று கூட்டுறவுத் துறையின் உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 11 மாநிலங்களில் உள்ள முதன்மை வேளாண் கடன் சங்கங்களில் தானிய சேமிப்புக்காக 11 கிடங்குகளை திறந்து வைத்தார். மேலும் 500 முதன்மை வேளாண் கடன் சங்கங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஸ்விக்கியுடன் கைக்கோர்க்கும் ஐஆர்சிடிசி..!

Mallinithya Ragupathi | 24 February 2024


ஐஆர்சிடிசி ஈ-கேட்டரிங் தளம் மூலம் பயணிகள் ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி ரயில் பயணிகள் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களை ஸ்விக்கி நிறுவனம் நேரடியாக பயணிகளின் இருக்கைக்கே கொண்டு வந்து சேர்த்துவிடும். முதல் கட்டமாக நான்கு ரயில் நிலையங்களில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் மெகா திட்டம்.. ஓடிவந்து உதவிய ஜப்பான்..

Mallinithya Ragupathi | 23 February 2024


சென்னை பெரிஃபெரல் ரிங் சாலை திட்டத்தின் 2-வது கட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) சுமார் ரூ.2,809 கோடி அதாவது 49,847 மில்லியன் ஜப்பானிய யென் கடனாக அளிக்க அனுமதித்துள்ளது. பெரிஃபெரல் ரிங் சாலை திட்டம் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரிவு படுத்துவதற்காக உருவாக்கப்படுகிறது.

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு கதவுகளை திறக்கும் மத்திய அரசு!

Mallinithya | 22 February 2024


அணுசக்தி துறையில் மின் உற்பத்தியை அதிகரிக்க மெகா திட்டத்தை அரசு வகுத்துள்ளது. கிட்டத்தட்ட 2.15 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வது குறித்து ரிலையன்ஸ் , டாடா , அதானி ,வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் அரசு முதலீட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அணுசக்தி துறையில், முதன்முறையாக, இந்திய அரசு தனியார் முதலீட்டை அனுமதிக்க உள்ளது.

3 ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு வந்த வெனிசுலா கச்சா எண்ணெய்..

Mallinithya Ragupathi | 19 February 2024


2023 அக்டோபரில் வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் - முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெனிசுலாவின் எண்ணெயை வாங்க துவங்கியுள்ளது. டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 ஆகிய இரண்டு மாதங்களில் வெனிசுலாவின் கச்சா எண்ணெயை வாங்குவதில் இந்தியா முதலிடம் பிடித்தது. தற்போது வெனிசுலா, உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட நாடாக உள்ளது.

டெஸ்லா வந்தா என்ன வராட்டி என்ன.. தமிழ்நாட்டு-க்கு 2 மெகா திட்டம் கிடைச்சிருக்கு..!

Mallinithya Ragupathi | 19 February 2024


டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் மத்தியஅரசு முதல் மாநிலஅரசு வரையில் பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், டெஸ்லா வரிச்சலுகை இல்லாமல் முதலீடு செய்ய முடியாது எனத் திட்டவட்டமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே திட்டமிட்டு டெஸ்லா-வுக்கு இணையாக மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகன துறையில் முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்தது. அதனால் தமிழ்நாட்டில் ஓலா, வியட்நாமின் விண்பாஸ்ட் ஆகிய நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு வேகமாக ஒப்புதல் அளிக்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் இஸ்ரோ..! ககன்யான் திட்டப் பணிகள் தீவிரம்

Mallinithya Ragupathi | 16 February 2024


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி இரண்டு ஆள்ளில்லா விண்கலத்தை LEO எனப்படும் Low Earth Orbit-க்கு அனுப்பும், 1 விண்கலத்தை மனிதர்களுடன் அனுப்பும். இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இதுவே முதன்முறை. இந்த திட்டத்திற்காக 9,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

13500 ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன நிர்வாகம்..!!

Mallinithya Ragupathi | 14 February 2024


இந்தியாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களான Paytm மற்றும் Byjus-ல் சுமார் 13,500 ஊழியர்கள், நிறுவனத்தில் அதிகரித்து வரும் ஒழுங்குமுறை பிரச்சனைகள் மற்றும் முதலீட்டாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்வதால் அச்சத்தில் வேறு நிறுவனங்களில் வேலை தேடுகின்றனர்.

இந்தியர்களே.. இனி 7 நாடுகளில் யுபிஐ பயன்படுத்தலாம்..!

Mallinithya Ragupathi | 14 February 2024


யுபிஐ செயலியை பயன்படுத்தி வெளிநாடுகளிலும் எளிதாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் இறங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை பிரான்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், இலங்கை, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகளில் யுபிஐ சேவையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நடக்கும் பெரிய மாற்றம்.. 4 ஆண்டுகளில் நிலைமையே வேற..!

Mallinithya Ragupathi | 13 February 2024


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதை தொடர்ந்து நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துவிட்டது. நூற்றுக்கணக்கான பிளாட்கள் கொண்ட அடுக்குமாடி அப்பார்ட்மென்ட்கள், ஸ்டார் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் என கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் மெகா நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அயோத்தியில் வந்து முதலீடுகளைக் குவிக்கின்றன. இந்த நிலையில் தாஜ், ரேடிசன், ஓபராய் ஹோட்டல்ஸ் என ஸ்டார் ஹோட்டல்கள் தங்கள் கிளைகளை அயோத்தியில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சென்னை-க்கு மாஸ்டர் பிளான் போடும் L&T.. ஓரே இடத்தில் 2 பெரிய ஐடி நிறுவனங்கள்..!!

Mallinithya Ragupathi | 13 February 2024


இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமான L&T தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கியபங்கு வகிக்கிறது. இந்த நிலையில் சென்னையில் சுமார் 12 லட்சம் சதுரடியில் LTI Mindtree மற்றும் L&T Technology Services ஆகிய இரண்டு பிரம்மாண்ட அலுவலகத்தைத் திறக்க உள்ளது. இரு நிறுவனங்களும் ஐடி மற்றும் டெக் சேவையில் ஈடுப்பட்டு வருபவை.

தமிழ்நாட்டின் சாதனை.. குஜராத் முதல் கர்நாடகா வரை பொறாமைப்படும் வெற்றி..! #EV

Mallinithya Ragupathi | 13 February 2024


இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கு முன்னோடியாக ஈவி துறையில் முடிசூடா மன்னனாக உள்ளது. இந்தியாவின் எலக்ட்ரிக் கார், பைக் ஆகியவை தயாரிப்பில் சுமார் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் அளவுக்கு மாநிலத்தின் ஈவி துறை உள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கீடு சுமார் 70 சதவீதமாகும். இதன்படி 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் EV தொழில்துறை மட்டுமே சுமார் 40 பில்லியன் டாலரை தொடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

6 வருட மோசமான நிலையில் ஐடி நிறுவனங்கள்.. அடுத்தது என்ன நடக்கும்..?

Mallinithya Ragupathi | 13 February 2024


இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த 4 காலாண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது ஒட்டுமொத்த ஐடி துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 75000 பேர் குறைந்துள்ளனர், இது கடந்த 6 வருடத்தில் நடக்காத ஒன்று. இந்த நிலை புதிதாக ஐடி துறையில் சேர காத்திருக்கும் பட்டதாரிகள் முதல் 20-30 வருடம் அனுபவம் உள்ள டெக் ஊழியர்களையும் கலங்க வைத்துள்ளது.

ஒரு டஜன் மாம்பழம் விலை ரூ.5000..! சீசன் துவங்குவதற்கு முன்பே ஷாக்..!!

Mallinithya Ragupathi | 12 February 2024


நம் நாட்டில் கோடைக்காலம் தொடங்கும் போது மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். ஆனால் மன்குராட் மாம்பழம் இப்போதே விற்பனைக்கு வந்திருப்பதால் மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதன் விலை தான் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஒரு டஜன் மாம்பழம் ரூ.5000 க்கு விற்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கும் என்றும், படிப்படியாக விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா, மஹிந்திரா-வுக்குப் போட்டியாக வரும் JSW.. ஒடிசாவில் மெகா திட்டம் கையெழுத்தானது..!!

Mallinithya Ragupathi | 12 February 2024


ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஒடிசாவில் எலக்ட்ரிக் வாகனம் (EV) மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒடிசா அரசாங்கத்துடன் ரூ.40,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜேஎஸ்டபிள்யூ திட்டத்தின் வாயிலாகச் சுமார் 11,000 பேருக்கு வேளைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவே முக்கிய இலக்காக கொண்டு களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் இப்பிரிவில் முன்னோடியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திராவுக்கு பெரும் போட்டி வர வாய்ப்பு உள்ளது.

திருச்சி மணப்பாறை-க்கு வரும் புதிய தொழிற்சாலை.. தமிழ்நாடு அரசின் திட்டம்..!!

Mallinithya Ragupathi | 12 February 2024


தமிழ்நாடு அரசு நிறுவனமான TNPL தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது. திருச்சி மணப்பாறை பகுதியில் TNPL நிறுவனம் மிகப்பெரிய தொழிற்சாலைகளை வைத்து இயக்கி வரும் வேளையில், இதே பகுதியில் 3வது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே TNPL நிறுவனம் திருச்சி மணப்பாறையில் மட்டும் இதுவரையில் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

EPFO: வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.25% ஆக உயர்வு!

Mallinithya Ragupathi | 12 February 2024


மத்திய அரசு பட்ஜெட்டில் ஈபிஎப் கணக்கு மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பு மூலம் மாத சம்பளக்காரர்கள் அனைவரையும் கவர முடியும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்படுவதாக EPFO நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் EPF கணக்கில் இருக்கும் பணத்திற்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க உள்ளது.

கோயம்புத்தூர்-க்கு வந்தாச்சு முதல் சிப்காட்...

Mallinithya Ragupathi | 8 February 2024


கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் சிப்காட்: கோயம்புத்தூரில் சூலூர் தாலுக்காவில் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் பகுதியை உருவாக்க உள்ளது. இந்தச் சிப்காட் பகுதியை TIDCO மூலம் இணைந்து பாதுகாப்புத் துறைக்கான பிரத்தியேக தொழிற்பூங்காவாக உருவாக உள்ளது. வருகிற நவம்பர் மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 373 ஏக்கரில் அமைய உள்ளது.

ஓலா: கிருஷ்ணகிரி தொழிற்சாலைக்கு லித்தியம் கொண்டுவர மெகா திட்டம்..!!

Mallinithya Ragupathi | 8 February 2024


தமிழ்நாட்டில் இருந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்கும் Ola Electric கிருஷ்ணகிரியில் புதிய பேட்டரி தொழிற்சாலை அமைக்க உள்ளது. அதனால் EV பேட்டரி உற்பத்திக்குத் தேவையான ஆதாரத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியாகத் தற்போது லித்தியம் கனிம பகுதிகளுக்கான சுரங்க உரிமைகளைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கிரீன் கார்டு, வொர்க் பர்மிட்.. அமெரிக்கா அறிவித்த புதிய தளர்வு, இந்தியர்களுக்கு ஜாக்பாட்!!

Mallinithya Ragupathi | 6 February 2024


அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற தேசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஹெச்-4 விசாவில் அமெரிக்காவில் வசித்து வரும் 1 லட்சம் பேருக்கு ஆட்டோமேட்டிக் முறையில் வொர்க் பர்மிட் வழங்கும் முறையைச் செயல்படுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தப் புதிய விதிகள் இந்தியர்களுக்குப் பெரிய அளவில் பயன்படும், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்காகக் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்தப் புதிய விதி பெரிய அளவில் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் அரிசி விற்பனைக்கு வந்தது...

Mallinithya Ragupathi | 6 February 2024


மத்திய அரசு 29 ரூபாய் என்ற மானிய விலையில் 'பாரத் அரிசி'யை செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவு 27.50 ரூபாய்க்கும், பாரத் கடலை பருப்பை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. இவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பு அரிசிக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

300 யூனிட் மின்சாரம் இலவசம்! அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

Mallinithya Ragupathi | 2 February 2024


நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.. ஏன் தெரியுமா?

Mallinithya Ragupathi | 2 February 2024


மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடக்க உள்ள வேளையில், தற்போது இடைக்கால பட்ஜெட்டே தாக்கலாகிறது. இது ஒரு முழுமையான பட்ஜெட் இல்லை என்பதால் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படாது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் முழு பட்ஜெட்டை ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கலாம் என்றார்.

தமிழ்நாட்டுக்கு வருகிறதா டாபர்..? பெரும் முதலீட்டு உடன் இடத்தைத் தேடி வருகிறது..!

Mallinithya Ragupathi | 1 February 2024


இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான காட்ரிஜ் சென்னை அருகே செங்கல்பட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 515 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 135 கோடி ரூபாய் முதலீடு செய்ய டாபர் இந்தியா-வின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் வரும் என்பது வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

வருடத்திற்கு ரூ.1.5 கோடி சம்பாதிக்கும் 8ம் வகுப்பு படித்த விவசாயி!

Mallinithya Ragupathi | 1 February 2024


குஜராத்தில் அம்ராபூர் கிரமத்தில் உள்ள விவசாயி தர்மேஷ். இவருக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் மிளகாய் விளைவித்து வருகிறார். அந்த மிளகாயை காய வைத்து, தூளாக மாற்றி உலக சந்தைகளில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போதைய சந்தை நிலவரப்படி தோராயமாக ரூ.1.5 கோடி வருமானம் கிடைக்கிறது. 45 வயதான தர்மேஷ் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மிளகாய் தூள் அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கும் செல்கிறது.

read more at

Paytm வங்கி சேவையை பிப்.29-ம் தேதியுடன் நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு

Mallinithya Ragupathi | 1 February 2024


பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை மூலம் வாடிக்கையாளர்கள், எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பேடிஎம் செயலியின் யுபிஐ முறை வழக்கம் போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

read more at

மொபைல் போன்களின் இறக்குமதி வரி குறைப்பு!

Mallinithya | 31 January 2024


மொபைல் போன்கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் முக்கிய பாகங்கள் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக இன்று குறைத்திருப்பதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் மொபைல் போன்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

read more at

உலக கோடீஸ்வரர் பட்டியல்: எலான் மஸ்கை பின் தள்ளி முதலிடம் பிடித்தார் அர்னால்ட்

Mallinithya | 30 January 2024


ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி எல்விஎம்எச் குழும தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார். இவ்விரு கோடீஸ்வரர்களும் 2022-ம் ஆண்டிலிருந்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை தக்க வைப்பதில் மாறிமாறி போட்டியிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன், மார்க் ஜுகர்பெர்க், வாரன் பஃபெட், லாரி பேஜ் ஆகியோர் உள்ளனர்.

read more at

ஊழியர்களை நீக்க முடிவு செய்த ஆன்லைன் வணிக நிறுவனம்...

Mallinithya | 29 January 2024


ஃபிளிப்கார்ட் நிறுவனம் தங்களின் 5 விழுக்காடு ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் நிறுவனத்தில் பணிபுரியும் 1000 ஊழியர்களின் வேலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கு நிறுவனத்தின் தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சாதாரண நடவடிக்கை இது எனவும், திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை வேலையை விட்டு விடுவிப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட், கூகுள், ஸ்விகி என பல நிறுவனங்களும் ஊழியர்களை குறைக்கும் முனைப்பில் உள்ளன.

read more at

அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல்- என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

Mallinithya | 27 January 2024


மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரக்கூடிய பட்ஜெட் என்ற காரணத்தால் மக்களை ஈர்க்கும் நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனா உள்ளிட்ட நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்த்து, தன்னாட்சியாக உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவருவதற்கு, மத்திய அரசின் பல்வேறு சலுகைகள் உதவ வேண்டும் எனவும் மற்றும் புதிய நிறுவனங்களுக்கான சலுகை அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

read more at

400 ஊழியரை வேலைநீக்கம் செய்கிறது ஸ்விக்கி நிறுவனம்

Mallinithya | 27 January 2024


உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் 400 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய உள்ளது. சென்ற ஆண்டு 380 பணியாளர்களை பணி நீக்கம் செய்த நிலையில் இந்த ஆண்டும் பணி நீக்கம் தொடர்கிறது. மற்றும் கடந்த ஆண்டு பேடிஎம் 1,000 ஊழியர்களையும் பிளிப்கார்ட் நிறுவனம் 1,000 ஊழியர்களையும் அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கின. தற்போது மீண்டும் சர்வதேச அளவில் வேலைநீக்கம் தொடங்கியுள்ளது.

read more at

3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது மைக்ரோசாஃப்ட்!

Mallinithya | 25 January 2024


மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சந்தை மதிப்பில் 3 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இணைந்துள்ளது. இதில் முதலிடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஏற்றம் கண்டது. அதன் மூலம் அந்நிறுவத்தின் சந்தை மதிப்பு 3 டிரியல்லன் டாலர்களை எட்டியுள்ளது.

read more at

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வீழும் விசைத்தறி... மீளுமா?

Mallinithya | 25 January 2024


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி சத்தம் என்பது உழைப்பின் சங்கீதமாகவே பார்க்கப்படுகிறது. வேலை இன்றி பல விசைத் தறிக்கூடங்களில், பூச்சிகள் கூடு கட்டும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக சரியான கூலி உயர்வு கிடைக்காமல் விசைத் தறியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மண்ணில் உள்ள பூர்வீகத் தொழிலை பாதுகாக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு என விசைத்தறியாளர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

read more at

புதிய போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்:

Mallinithya | 20 January 2024


அஞ்சல் அலுவலகத்தின் 5 ஆண்டு தொடர் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசாங்கம் உயர்த்தி உள்ளது. இதில் 6.7சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும். மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

எஃப்.டி வட்டி 8.40 சதவீதம் வரை உயர்வு:

Mallinithya | 20 January 2024


2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இன்றைய காலகட்டத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் மிக முக்கிய தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் தங்களின் எஃப்.டி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன.

பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்வாகனங்களாக மாற்ற மானியம் வழங்க கோரிக்கை

Mallinithya | 20 January 2024


மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பழைய வாகனங்களை அழிப்பதற்குப் பதிலாக, அவற்றை மின்வாகனங்களாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்றும் இதற்கு மத்திய அரசு மானியம்வழங்க வேண்டும் என்று பிரிமஸ் பார்ட்னர் மற்றும் இடிபி ஆகிய இரு நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

read more at

கர்நாடகாவில் வேலை நிறுத்தம்: தமிழக லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தம்

Mallinithya | 19 January 2024


மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நீதி சன்ஹிதா ( பிஎன்எஸ் ) சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லவிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை போலீசார் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தினர்.

read more at

“மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துதான்!' - உதயநிதிக்கு வானதி சீனிவாசன் பதில்

Mallinithya | 19 January 2024


மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துதான் என நாங்கள் கூறவில்லை. உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. எனவே, இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளருக்கு ஒப்படைப்பதுதானே நியாயமாக இருக்கும். அதேபோல் கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரித்துப் பார்ப்பது முட்டாள்தனம்; சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி ; என உதயநிதியின் கூற்றுக்கு வானதி சீனிவாசன் பதில்

read more at

அர்ஜென்டினா - இந்தியா இடையே லித்தியம் சுரங்க ஒப்பந்தம்:

Mallinithya | 17 January 2024


மின்சார வாகனங்கள், செல்போன்கள்,லேப்டாப்களில் லித்தியம் பேட்டரிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு லித்தியத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா தலைமையில் தாது பாதுகாப்பு கூட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா அர்ஜென்டினாவில் உள்ள சுரங்கத்தில் லித்தியம் எடுக்கும் ஒப்பந்தத்தை செய்துள்ளது.இந்த ஒப்பந்தம் லித்தியம் விநியோகத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு உதவும் என நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.

read more at

குஜராத்திற்கான 5 அசத்தல் திட்டங்கள்… முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு

Raghu | 10 January 2024


ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தி வருகிறது. உலகின் மற்ற பகுதிகளை விடவும் ரிலையன்ஸின் 5ஜி உட்கட்டமைப்பு சிறந்ததாக உள்ளது

read more at

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; மீடியா, மெட்டல் பங்குகள் உயர்வு

Raghu | 10 January 2024


வணிகம் | Tata Elxsi பங்குகள் கிட்டத்தட்ட 1% உயர்ந்து Rs8,725.55 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வாக வர்த்தகம் செய்யப்பட்டு 1.4% உயர்ந்து ரூ.

மூடிஸ்: டவுன் கிரேட் செய்யப்பட்ட வேதாந்தா... பங்கு விலை என்னவாகும்?

Raghu | 10 January 2024


வேதாந்தா ரிசோர்சஸ் வரும் 24 மாதங்களுக்கு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என மூடிஸ் தரகு நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. | Vedanta stock in focus amid

read more at

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும்: உலக வங்கி கணிப்பு

Raghu | 10 January 2024


இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, வெளிநாட்டு முதலீடு உட்பட தனியார் த

ரசாயன நிறுவனப் பங்கு விலை சரிவு... மொத்தமாக அள்ளிய எல்.ஐ.சி!

Raghu | 10 January 2024


நவின் ஃப்ளோரின் நிறுவனத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு 5.04 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. நவின் ஃப்ளோரின் நிறுவனத்தின் பங்கு விலை இறங்கியுள்ள காலகட்

read more at

Fastag ல் Kyc-அப்டேட் அவசியம்-மத்திய அரசு

Mallinithya | 17 January 2024


இந்தியாவில் தற்போது வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்டாக் (FASTag) முறை பயன்படுத்தப்படுகிறன.இதனுடைய அடுத்தகட்ட வளர்ச்சியாக ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டாக் என்ற முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி கேஒய்சி அப்டேட் செய்யதவதற்குகான ஃபாஸ்டாக் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதத்தில் 11,704 மில்லியன் யூனிட் - தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

Mallinithya | 16 January 2024


அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 11,704 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிதியாண்டு நிறைவடைவதற்குள் 12000 மில்லியன் யூனிட் என்ற அளவைக் கடப்பதுடன், கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.

read more at

10 நாள்கள் பின்நோக்கி சென்ற தங்கம், வெள்ளி!!

Mallinithya | 16 January 2024


தங்கம் விலை இன்று (ஜன.16,2024) பவுனுக்கு ரூ.160 வரை சரிந்து காணப்படுகிறது.இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160ம் குறைவாகும்.வெள்ளி கிலோ ரூ.300 சரிவு வெள்ளி கிராம் நேற்றைய விலையை காட்டிலும் 30 பைசா வரை சரிந்து காணப்பட்டது. இது கிலோவுக்கு ரூ.300 சரிவாகும்.