பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ரஜினிகாந்த்!

Mallinithya Ragupathi | 28 February 2024


நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171 வது படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பின் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நடியாவாலா (Sajid Nadiadwala) படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் என்ன படம் யார் இயக்குநர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயன் படத்தின் அடுத்த போஸ்டர் ரெடி!

Mallinithya Ragupathi | 27 February 2024


தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அடுத்தடுத்த போஸ்டர்களை தனுஷ் கடந்த சில தினங்ளாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் அபர்ணா முரளியின் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

தேர்தலையொட்டி விஜய்யின் மாஸ்டர் பிளான்!

Mallinithya Ragupathi | 26 February 2024


நடிகர் விஜய் நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியாவில் இல்லாமல் GOAT படத்தின் சூட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக தளபதி 69 படத்தை 2026 தேர்தல் பணிகள் பாதிக்காத வண்ணம் நடித்து முடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அடுத்தப் படத்தோட சூட்டிங்.. லெஜெண்ட் சரவணன் சொன்ன அப்டேட்!

Mallinithya Ragupathi | 24 February 2024


தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் லெஜெண்ட் சரவணன். இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக சமூக வலைதளம் மூலமாக அப்டேட் செய்துள்ளார் லெஜன்ட் சரவணன்.

நயன்தாரா, அட்லீக்கு தாதா சாகேப் பால்கே விருது...

Mallinithya Ragupathi | 23 February 2024


இந்திய திரைத்துறையில் கௌரவமான விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடந்தது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா, நயன்தாரா, அட்லீ ஆகியோர் விருது பெற்றனர்.

எஸ்கே 23 ... ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து சம்பவம் செய்வாரா?

Mallinithya Ragupathi | 15 February 2024


ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்த நிலையில் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்துக்கு தற்காலிகமாக எஸ்கே 23 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்ய பார்த்தா பாவமா இருக்கு... ஜேம்ஸ் வசந்தன் அதிரடி!

Mallinithya Ragupathi | 12 February 2024


விஜயின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனம் திறந்து உள்ளார் அதில் விஜயின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விஜய்யை பார்க்க பாவமாக உள்ளது. உச்சத்தில் இருக்கும் இவர் இப்படி முடிவெடுப்பது தவறான விஷயமாகும் எனக் கூறியுள்ளார். எம்ஜிஆர் கூட முதலமைச்சர் ஆன பின்னரும் நடித்தார். ஆனால், விஜய்யின் இந்த முடிவு அவருக்கு நல்லதல்ல. களத்தில் இறங்கி வேலை பார்ப்பது அவ்வளவு எளிதானது கிடையாது எனக் கூறியுள்ளார்.

"விஜய் வரிசையில் விஷாலின் முதலமைச்சர் கனவு..” ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!

Mallinithya Ragupathi | 10 February 2024


தானும் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த விஷால் "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என குறிப்பிட்டு தனது அரசியல் கட்சியின் பெயர் "மக்கள் நல இயக்கம்" என அறிவித்தார். இது குறித்து ரஜினியிடம் கேள்வி கேட்கப்பட்டது. சட்டென சிரித்த ரஜினி, 'சாரி அரசியல் பத்திலாம் வேண்டாம்’ என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர் அடிச்சாத்தான் தெரியுமா?.. ரஜினியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

Mallinithya Ragupathi | 10 February 2024


இந்த ஆண்டு வெளியான படங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில் லால் சலாம் படத்துக்கு ஒட்டுமொத்தமாகவே நெகட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். படத்தின் விமர்சனத்தை முடித்து ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருந்தார். ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர் அடித்தால் தான் அது ஆரஞ்சு பழம் என தெரியுமா? அப்படியே தெரியுது ரஜினிகாந்த் சங்கி என்று என அவர் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிக்கலில் விஜய்யின் திருமண மண்டபங்கள்?.. காப்பாற்ற மாஸ்டர் பிளான்!

Mallinithya Ragupathi | 9 February 2024


விஜய்யின் அரசியல் என்ட்ரிதான் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அவரது பல திருமண மண்டபங்கள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, இந்த மண்டபங்களுக்கு முறையான பத்திர பதிவு உள்ளதா மாநகரட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா, வேறெதுவும் வில்லங்கங்கள் உள்ளதா என்று குடைச்சல் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் விஜய் தனது திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைக்கவும், மற்ற வாடகைகளுக்கும் கைமாற்றி விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்ஜிஆர் மாதிரி எல்லாரும் ஆகிட முடியாது.. விஜய் அரசியல் வருகை குறித்து கே. ராஜன் பேச்சு!

Mallinithya Ragupathi | 7 February 2024


விஜய் அரசியல் கட்சியை உருவாக்கிய நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது, அரசியலில் பெரிதாக சாதிக்க வேண்டும் என பல நடிகர்கள் அரசியல் களத்தில் இதற்கு முன் தோல்வியை சந்தித்துள்ளனர். தற்போது நடிகர் விஜய் எம்ஜிஆரைப் போலவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்கிறார், முதலமைச்சர் நாற்காலியில் அமர்வாரா என்பது சந்தேகம்தான் என அவர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இறந்து விட்டதாக மலிவான விளம்பரம்...வசமாக சிக்கிய பூனம் பாண்டே!

Mallinithya Ragupathi | 7 February 2024


பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை புற்று குறித்த விழிப்பணர்வுக்காக அப்படி விளம்பரம் செய்ததாகவும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பி குற்றத்திற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்... நாவலில் இருந்து உருவாகும் தளபதி 69...

Mallinithya Ragupathi | 7 February 2024


விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் இது புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் அரசியல் வருகை.. ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன பதில்!

Mallinithya Ragupathi | 6 February 2024


ரஜினிகாந்துக்கும் விஜய்க்கும் இடையே கடந்த ஆண்டிலிருந்தே மோதல் போக்கு உள்ளது. இதையடுத்து ஜெயிலர் படத்தில் பேர பறிக்க நாலு பேரு என விஜய்யை மறைமுகமாக தாக்கி பாடல் வெளியானது. இதைத் தொடர்ந்து லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன ஒரு குட்டி கதை ரஜினியை தாக்கியதாக இருந்தது. இந்த நிலையில், ரஜினியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, அவருக்கு வாழ்த்துக்கள் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

“விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்... கட்சியின் பெயர் தவக்கழ” ஃபுல் பார்மில் ப்ளூ சட்டை!

Mallinithya Ragupathi | 3 February 2024


விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்"விஜயின் கட்சி பெயரை சுருக்கி 'தவக்கழ' என தல ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்" என ப்ளூ சட்டை மாறனே பங்கம் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செத்துட்டேன்னு நாடகம் ஆடிய பூனம் பாண்டே...

Mallinithya Ragupathi | 3 February 2024


நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோவில் நான் உயிரிழக்கவில்லை. அனைவரும் மன்னித்து விடுங்கள். என்னை போன்ற பல பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். அதுகுறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தவே நான் இறந்து விட்டதாக அறிவித்தேன் என அதிர வைத்துள்ளார்.

விஜய்யின் கடைசி படம்...

Mallinithya Ragupathi | 3 February 2024


விஜய் நேற்று தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவுத்திருந்த நிலையில் இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் சாருக்கு வில்லனா நடிக்கணும்.. அசோக் செல்வனின் ஆசை!

Mallinithya Ragupathi | 2 February 2024


நடிகர் அசோக்செல்வன் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் அவருடன் வில்லனாக நடிப்பதே தன்னுடைய ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான பேக்கப்பும் இல்லாமல் தன்னை நிரூபித்த அஜித்தின் வாழ்க்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அஜித்தின் இந்தப் பயணம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அஜித்தின் பில்லா 2 படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் அசோக் செல்வன்.

சன்டான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2024: இந்திய திரைப்படங்களுக்கு வெற்றி

Mallinithya | 29 January 2024


இந்த ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய விருதுகளை இரண்டு திரைப்படங்கள் வென்றன. முதல் படம் சுசி தலாதியின் கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் இப்படம் ஆடியன்ஸ் விருது மற்றும் ஜூரி விருதுகளை வென்றது. இது இமயமலையில் அமைந்துள்ள கண்டிப்பான உறைவிடப் பள்ளியில் நடக்கும் ஒரு கதை. இரண்டாவது படம் அனிர்பன் தத்தா, அனுபமா சீனிவாசனின் நாக்டர்ன்ஸ். இந்த ஆவணப்படம் ஜூரி விருதை வென்றது. இந்த ஆவணப்படம் இமாலயத்தை சுற்றியுள்ள பருந்து மற்றும் அந்துப்பூச்சிகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது.

இந்திரா காந்தியை அவமதிக்கும் கங்கனா.. சர்ச்சையில் சிக்கும் எமர்ஜென்சி

Mallinithya | 27 January 2024


நடிகை கங்கனா இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த எமர்ஜென்சி திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படம் ரிலீஸின் போது எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் இந்த படம் வெளியாகுவதில் சிக்கல் உருவாகி உள்ளது. இதுகுறித்து கங்கனா தெரிவிக்கையில் இந்தியாவின் வரலாற்றிலிருந்து இந்த அசாதாரண அத்தியாயத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவேன் என்றார்.

பண்ணயபுரத்தில் பவதாரிணி உடல் இன்று நல்லடக்கம்..!

Mallinithya | 27 January 2024


கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜா மகள் பவதாரிணி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் உடல், நேற்று மதியம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தியாகராய நகரில் இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் பவதாரிணியின் உடல் இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

read more at

விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை

Mallinithya | 27 January 2024


விஜய்க்கும், தனக்கும் போட்டி என ரசிகர்கள் பேசுவது மிகவும் கவலை அளிப்பதாக ரஜினிகாந்த் கூறிஉள்ளார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது, தான் சொன்ன காக்கா - கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அது தம்மை வேதனையடைய செய்தது என்றும் கவலை தெரிவித்தார். இத்துடன் அதனை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். விஜய்யின் அரசியல் முயற்சிகளுக்காக அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்.

read more at

நிக்சன் பேச்சுக்கு ஐஸு அப்பா பதிலடி போஸ்ட்..அதுவும் அந்த வீடியோவை பகிர்ந்து

Raghu | 26 January 2024


நிக்சன்நிக்சன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பல நாட்கள் ஆனாலும் இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை.நம் சினி...

read more at

ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா...

Mallinithya | 24 January 2024


ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதற்கு அடுத்து நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். நெல்சன் அதற்கான கதையை எழுதி வருகிறார். இதில் ரஜினியுடன் நயன்தாரா நடிக்கயிருப்பதாக உள்வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

read more at

2023 இல் 12,000 கோடிகளை தாண்டிய இந்திய சினிமா வர்த்தகம்

Mallinithya | 24 January 2024


ஒவ்வொரு வருடமும் இந்திய சினிமா வர்த்தகம் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதை ஆர்மேக்ஸ் மீடியா தெரியப்படுத்தி வருகிறது. சென்ற வருடம், இந்திய சினிமா வர்த்தகம் 12,000 கோடிகள் என்ற இலக்கை கடந்துள்ளது. இந்த வர்த்தக பங்களிப்பில் இந்தி சினிமா முதலிடத்திலும் இரண்டாவதாக தெலுங்கும், மூன்றாவதாக தமிழ் சினிமாவும் உள்ளது. 2024 இல் தமிழில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் தமிழ் சினிமா வர்த்தகம் 3000 கோடிகளைத் தாண்ட வாய்ப்புள்ளது.

read more at

பெயரிலேயே எதிர்பார்ப்பை தூண்டும் வடிவேலு, பஹத் பாசில் படம்!

Mallinithya | 24 January 2024


மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த வடிவேலு, பஹத் பாசில் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஆர்பி சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பான பொய் ரூபங்களை குறிக்கும் பெயரானது மாரீசன்( மாயமான்)எனப்பட்டது. இப்படத்தில் வரும் மாயமான் வடிவேலா இல்லை பஹத்தா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

read more at

கதை திருட்டு புகார்.. சிக்கலில் கேப்டன் மில்லர்..

Mallinithya | 22 January 2024


தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை தனது ‘பட்டத்து யானை’ நாவலில் இருந்து எடுத்துள்ளதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

read more at

மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்..

Mallinithya | 19 January 2024


நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் எதிர்பார்த்த கலெக்சன் வரவில்லை, அதிலும் குறிப்பாக வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்கள் சரிவர திரையரங்கை கொடுக்கவில்லை. இப்போது அயலான் படத்திற்கு பிறகு மறுபடியும் சிவகார்த்திகேயன் கடனாளியான மாற்றிவிட்டனர்.

read more at

கத்தாரில் தண்டனை பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர்கள் மீட்கப்படுவார்களா?

Mallinithya | 19 January 2024


கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருந்தது. இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள் கத்தாரின் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இதில் பணியாற்றி வந்த இவர்களை கடந்த ஆண்டு கத்தார் உளவுத்துறை கைது செய்தது. கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், முன்பு இந்திய கடற்படையின் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றியவர்கள்.

read more at

கூகுள் பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை :

Mallinithya | 19 January 2024


கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 7,500 ஆயிரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை: நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் பணீநீக்க நடவடிக்கையை தொடங்க கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

read more at

பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது

Mallinithya | 17 January 2024


தமிழகத்தை சேர்ந்த பிரபல பக்தி பாடகர் வீரமணிதாசன் பல திரைப்படங்களில் பக்தி பாடல்களை பாடி உள்ளார். இசை கலைஞர்களுக்கு கேரள அரசு வழங்கும் உயரிய விருதான ஹரிவராசனம்' விருதை வீரமணிதாசனுக்கு மாநில அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். விருதுடன் லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

'சாமுராய்' பட நடிகைய நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Raghu | 10 January 2024


வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய் படங்களில் கதாநாயகியாக நடித்த அனிதா ஹாசனந்தனியை நினைவிருக்கா? வைரலாகும் ரீசென்ட் புகைப்படம்.

read more at

வெற்றிக்கு பின்னால் வலி இருக்கிறது சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Ragupathi | 13 January 2024


சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'அயலான்' படத்தை ஆர்.ரவி குமார் இயக்கி உள்ளார். பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடைசி நிமிடம் வரை கடும் போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சம்பளம் பெறாமல் நடித்தார் சிவகார்த்திகேயன். கடைசியாக தயாரிப்பாளரின் 25 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்று படத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் உடன் கைகோர்க்கும் 5 ஸ்டார் கதிரேசன்

Mallinithya | 16 January 2024


தயாரிப்பாளர் கதிரேசன் தனது 5 ஸ்டார் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.முதல் முறையாக நடிகர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அதன் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

அசுர வேகத்தில் வசூலை குவித்த ஹனுமான் திரைப்படம்!!

Mallinithya | 16 January 2024


ஹனுமான் திரைப்படத்தின் VFX காட்சிகள் அருமையாக இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஹனுமான் படத்தின் வசூல் விவரம் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதில் நான்கு நாட்களில் உலக அளவில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

read more at

விஜய் சேதுபதியின் பிறந்தநாளில் வெளியான மகாராஜா படத்தின் போஸ்டர்!!

Mallinithya | 16 January 2024


இன்று (16/01/2024) விஜயசேதுபதியின் பிறந்த நாள் என்பதால் தற்போது அவர் நடித்து வரும் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.