இந்தியா

விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்கள்: வெளியானது பட்டியல்!!

Mallinithya Ragupathi | 28 February 2024


இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ககன்யான் விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள்: சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளார்.

ரயில்வே துறையில் ரூ.41,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல்

Mallinithya Ragupathi | 27 February 2024


அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக ரூ 41000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை 24 மாநிலங்களில் 1,500 ரயில்வே மேம்பாலங்களுக்கு பிரதமர் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

read more at

ஹரியானாவில் பரபரப்பு: பிரபல அரசியல் தலைவர் சுட்டுக் கொலை

Mallinithya Ragupathi | 26 February 2024


இந்திய தேசிய லோக் தளத்தின் ஹரியானா மாநிலப் பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ ஜஜ்ஜார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் திடீரென தற்காலிகமாக வாபஸ்..

Mallinithya Ragupathi | 24 February 2024


டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அம்பாலா போலீசார் அறிவித்த நிலையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று விவசாயச் சங்கத்தின் போராட்டத்தைத் தற்காலிகமாக பிப் 29 தேதி வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Mallinithya Ragupathi | 21 February 2024


வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

read more at

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 25ல் வானொலியில் ஒலிபரப்பு

Mallinithya Ragupathi | 23 February 2024


பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிப்பரப்பாகிறது. இதனை தொடர்ந்து உடனடியாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு மனதின் குரலாக ஒலிபரப்பாகும்.

read more at

காவிரி தண்ணீர் காலி..தண்ணீர் பற்றாக்குறையில் பெங்களூர்..

Mallinithya | 21 February 2024


கோடைக்காலம் இன்னும் தொடங்கப்படாத நிலையில் கர்நாடகாவின் முக்கிய நகரமான பெங்களூரில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கும் தேஜஷ்வி யாதவ்!

Mallinithya | 22 February 2024


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களின் ஆதரவை திரட்ட பீகாரில் ஜன்விஸ்வாஸ் யாத்திரை என்ற பெயரில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ். ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்கான யாத்திரை என்பதை வெளிப்படுத்தும் வகையில், “Bahujan, agada, aadhi abaadi, poor” என்பதின் சுருக்கமாக “BAAP" என்ற வார்த்தையும் யாத்திரையில் முழங்கப்படுகிறது.

read more at

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் காலமானார்..!

Mallinithya | 22 February 2024


சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (95) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் விருதுகள் பெற்றுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

read more at

புல்வாமா தாக்குதல்-பாஜகவை அலறவிட்ட ஆளுநர் சத்யபால் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை

Mallinithya Ragupathi | 22 February 2024


2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜகவுக்கு ஏமாற்றம்.. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது..

Mallinithya Ragupathi | 22 February 2024


டெல்லி, குஜராத், அசாம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் தனித்து போட்டியிட முடிவு செய்த ஆம் ஆத்மி பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி.. 23 வயது விவசாயி உயிரிழந்த சோகம்!

Mallinithya Ragupathi | 22 February 2024


ஹரியானா பஞ்சாப் எல்லையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சுந்தரன் சிங் என்ற 23 வயது விவசாயி காயம் அடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இரண்டு பேர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது டெல்லி எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

read more at

சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சி பெருமிதம்! திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்

Mallinithya Ragupathi | 21 February 2024


''ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து ரத்து செய்யப்பட்ட பின், யூனியன் பிரதேசம் வளர்ச்சியை நோக்கி வேகமாக நடைபோடுகிறது,'' என, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

read more at

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. டெல்லியை முற்றுகையிட செல்லும் விவசாயிகள் ஹரியானாவில் கைது

Mallinithya Ragupathi | 21 February 2024


மத்திய அரசுடன் நடத்தப்பட்ட 4ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர்களில் செல்லும் போது அவர்களை ஹரியானா எல்லையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்கள் நடத்திய போராட்டம் 13 மாதங்களுக்கு மேல் சென்றது. அது போன்றதொரு போராட்டத்தை நடத்த 6 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களுடன் டெல்லி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை : நாளை மீண்டும் விவசாயிகள் பேரணி

Mallinithya Ragupathi | 20 February 2024


மத்திய அரசு விவசாயிகளுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நாளை (பிப்.21)ம் தேதி டில்லி நோக்கி மீண்டும் பேரணி துவக்க உள்ளதாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளன.

read more at

தேடப்படும் குற்றவாளி தலைக்கு 50 பைசா நிர்ணயம்..! காரணம் இதுதான்...!

Raghu | 20 February 2024


குற்றவாளிகளுக்கு எப்போதும் சமூகத்தில் மதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையிலேயே புழக்கத்தில் இல்லாத 50 பைசா சன்மானம் அறிவித்துள்ளதாக போலீஸ் விளக்கம்

read more at

இது ‘எய்ம்ஸ் வாரம்’.. 6 மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர் மோடி!

Mallinithya Ragupathi | 20 February 2024


இந்த வாரம் எய்ம்ஸ் வாரம்: இன்று (பிப்ரவரி 20) முதல் அடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திறந்து வைக்கிறார். ஜம்மு காஷ்மீர், குஜராத்தில் ராஜ்கோட், மங்களகிரி, பதிண்டா, ரேபரேலி மற்றும் கல்யாணி ஆகிய ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். இந்தநிலையில் தமிழகத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது? மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டதா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

திருப்பதி தரிசன டிக்கெட் குறித்த தகவல்கள்!!

Mallinithya Ragupathi | 19 February 2024


திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று (பிப்-21) வெளியிடப்படுகிறது. இந்த தரிசன டிக்கெட்டுகள் மே மாதத்திற்கானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கு காலை 10 மணிக்கும், தங்கும் அறைகளின் ஒதுக்கீட்டிற்கு மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டோகா தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று டிடிடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

read more at

சீனா எல்லையில் சாலைகள் அமைக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு!

Mallinithya Ragupathi | 16 February 2024


சீனா அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழைவது பெரும் பிரச்னையாக இருப்பது மட்டும் அல்லாமல், இரு நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ தலைவர்கள் பல வருடங்களாக இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் முழமையான தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது சீனா- இந்தியா எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது, எல்லையில் போக்குவரத்தை எளிதாக்கும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இதற்காக சாலைகள் அமைக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

உலக அளவில் கடைசி இடம் பிடித்த இந்தியா.. ஆனால் இந்தியர்கள் மகிழ்ச்சி

Mallinithya Ragupathi | 16 February 2024


உலகிலேயே அதிக விவாகரத்தை பெறும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஒரு சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. உலகிலேயே அதிக விவகாரத்தை பெறும் நாடாக ஐரோப்பா நாடான போர்ச்சுக்கல் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

read more at

மகளுக்காக பாரம்பரிய தொகுதியை விட்டுக்கொடுக்கும் சோனியா காந்தி

Mallinithya Ragupathi | 15 February 2024


கடந்த மக்களவைத் தேர்தலில் உத்திர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் இத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி வரும் மக்களைவை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும் மகள் பிரியங்கா காந்தியை ரேபரேலி தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

read more at

தேடப்படும் குற்றவாளி தலைக்கு 50 பைசா நிர்ணயம்..! ராஜஸ்தானில் வினோத அறிவிப்பு..

Mallinithya Ragupathi | 15 February 2024


ராஜஸ்தானில் யோகேஷ் மேக்வால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மேலும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு 50 காசுகள் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இந்த வினோத அறிவிப்பு பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட எஸ்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “குற்றவாளிகளின் மதிப்பு 50 பைசாதான். அதுகூட தற்போது புழக்கத்தில் இல்லை. குற்றவாளிகளுக்கு எப்போதும் சமூகத்தில் மதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.” என்றார்.

read more at

தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்..!!

Mallinithya Ragupathi | 15 February 2024


சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் தற்போது அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக முதல் திருநங்கை சிந்து பணிபுரிந்து வருகிறார். மேலும், தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

read more at

1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் விமான நிறுவனம்?

Mallinithya Ragupathi | 15 February 2024


ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. எனினும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. தற்போது வணிக நாளிதழான எகனாமிக் டைம்ஸ், ஸ்பைஸ்ஜெட்விமான நிறுவனம் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இருந்து சுமார் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யும் என்று கூறி இருக்கிறது.

read more at

மீண்டும் விவசாயிகள் போராட்டம்; ட்ரோன்கள் மூலம் கண்ணீர்குண்டு வீச்சு

Mallinithya Ragupathi | 15 February 2024


2020 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாயிகளின் முற்றுகையை தடுக்க ஆணிகளால் ஆன தடுப்புகளை போலீசார் வைத்துள்ளனர். மேலும் காவல்துறையின் கண்ணீர் புகை குண்டு வீச்சில், 60 விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள், காவல்துறையினர் அமைத்திருந்த கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர்கள் மூலம் இடித்து தள்ளினர். பாலத்தில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளையும் விவசாயிகள் கீழே தூக்கி வீசினர். இதனால் மேலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது

read more at

இந்தியாவிற்கு ட்ரோன்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்

Mallinithya Ragupathi | 3 February 2024


கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நவீன ட்ரோன்களை நம் நாட்டுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய மதிப்பில் 33,000 கோடி ரூபாயில் 31 எம்.க்யூ. 9பி ட்ரோன்கள் வாங்கப்படுகின்றன.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய கோர்ட் அனுமதி

Mallinithya Ragupathi | 1 February 2024


உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி அங்கு இருந்த இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்தநிலையில் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து அடுத்த 7 நாட்களில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு லட்சம் லட்டுகள்!!

Mallinithya | 20 January 2024


அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற திங்களன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில், அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச ஸ்ரீவாரி பிரசாதம் (லட்டு) வழங்கவுள்ளது. இதற்காக சுமார் ஒரு லட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன. இந்த லட்டுகள் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

read more at

பொங்கலுக்குப் பின் ஆம்னி மற்றும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

Mallinithya | 13 January 2024


பேருந்துகள் நிற்கும் இடத்தை அறிந்துகொள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். முதற்கட்டமாக அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கலுக்கு பின் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க தலைமை நிர்வாக அலுவலராக பார்த்தீபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலரான ஜெ.யார்த்தீபன் நிர்வாக அலுவலராக நியமனம்.

read more at

கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் டாப்-10 நிறுவனங்கள்!!

Ragupathi | 3 January 2024


இந்தியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வழக்கம்போல் இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.இந்தியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வழக்கம்போல் இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

read more at

டாடா எஸ்யூவி கார்களின் விற்பனையை யாராலும் முந்த முடியல!!

Ragupathi | 3 January 2024


இந்தியாவில் சமீப காலமாகவே எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2023 டிசம்பர் மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கலாம்.இந்த தொகுப்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கலாம்.

read more at

நாளை இஸ்ரோ செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! - Test

Ragupathi | 3 January 2024


இஸ்ரோ முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதம்2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்திய ஆதித்யா எல்1 என்ற விண்கலம் நாளை மாலை எல்1 என்ற பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் இஸ்ரோவால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் குறித்த விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் குறித்த விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.

read more at