அரசியல்

எடுபடாத ராமர் பிரச்சாரம்? எம்.ஜி.ஆர்ரை பிரச்சாரத்தில் இறங்கிய மோடி

Mallinithya Ragupathi | 28 February 2024


பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று பேசியிருந்தார். அதே கட்சியினை சேர்ந்த பிரதமர், எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி உள்ளார். ஒரே கட்சியில் இருந்து இரு வேறு கருத்துகள் வெளிவருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது.

இன்று முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் நிறைவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்

Mallinithya Ragupathi | 27 February 2024


தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் இன்று தலை­மைச் செய­ல­கத்­தில், பல்­வேறு துறை­க­ளின் சார்­பில் ரூ.8,801.93 கோடி செல­வில் முடி­வுற்ற திட்­டப் பணி­களை மக்­கள் பயன்­பாட்­டிற்­கா­கத் திறந்து வைக்க உள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து!' - உயர் நீதிமன்றம்

Mallinithya Ragupathi | 26 February 2024


வீட்டு வசதி வாரிய முறைகேடு புகார் வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 28-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

read more at

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Mallinithya Ragupathi | 24 February 2024


தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று(24-02-2025) கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் திட்­டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் தொடங்கி வைக்க உள்ளார். ரூ.1516 கோடி மதிப்­பீட்­டில் இந்த திட்­டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ‘விவாதம்’ - ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?!

Mallinithya Ragupathi | 23 February 2024


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை தேசிய சொத்து என்று குறிப்பிட்டது. மேலும், பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைப்பதற்கான ஆலோசனையை உச்ச நீதிமன்றம் முன்மொழிந்தது. இது, தற்போது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

read more at

பெங்களூருவில் மார்ச் 4 முதல் வேலை நிறுத்தம் போக்குவரத்து ஊழியர்கள் முடிவு

Mallinithya | 22 February 2024


பெங்களூருவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் மார்ச் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் பேருந்து போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.

read more at

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

Mallinithya Ragupathi | 22 February 2024


லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாதது மக்களுக்கு செய்யும் துரோகம் என புதுவை சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல்! என்னென்ன திட்டங்கள் இருக்கும்?

Mallinithya Ragupathi | 21 February 2024


சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 21 ஆம் தேதி மேயர் பிரியா தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கெனவே பொது பட்ஜெட்டில் சிங்கார சென்னை, வடசென்னை உள்ளிட்டவைகளுக்கு பிரதான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பட்ஜெட் முடிந்ததும்.. தமிழ்நாடு முழுக்க மக்கள் போனுக்கு போன எஸ்எம்எஸ்.. இதெல்லாம் வேற லெவல்..

Mallinithya Ragupathi | 20 February 2024


நேற்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்புகள் மக்களுக்கு நேரடியாக முதன்முறையாக எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் திமுக அரசின் பிரச்சார யுக்தியாவும் கூட இது பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு புதிதாக 6 முக்கிய மேம்பாலங்கள்! அதுவும் இன்னும் சில மாதங்களில்!

Mallinithya Ragupathi | 20 February 2024


சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கடந்த 2021 முதல் 2023 வரை சென்னை மாநகராட்சி 10 மேம்பால திட்டங்களைக் கையில் எடுத்தது. அதில் 6 திட்டங்களை இந்தாண்டிற்குள் முடிக்கச் சென்னை கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: இன்று தாக்கலாகிறது.. விவசாயிகள் எதிர்பார்ப்பு!

Mallinithya Ragupathi | 20 February 2024


2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19ஆம் தேதி) தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாதீங்க! பழங்குடியின அமைப்பு வேண்டுகோள் மணிப்பூர் கலவரம்

Mallinithya Ragupathi | 19 February 2024


கடந்த 15ஆம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட போராட்டத்தை தடுக்க கூட்டத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுராசந்த்பூரைச் சேர்ந்த இருவர் பலியாகினர். இதற்காக இதுவரை மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று முதல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பழங்குடியின மக்கள் பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பழங்குடியின அமைப்பினர் கோரிக்கை விழித்துள்ளனர்.

read more at

தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் மத்திய அரசு

Mallinithya Ragupathi | 17 February 2024


அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர விற்பனை, அரசியலமைப்புக்கு எதிரானது, மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை, மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

read more at

ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்

Mallinithya Ragupathi | 17 February 2024


நம் நாட்டு ராணுவத்தை மேலும் பலப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. இதன்படி, நம் நாட்டு ராணுவத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 84,560 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ராணுவ தளவாடங்களை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

read more at

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை..!" - தமிழ்நாடு அரசு உத்தரவு

Mallinithya Ragupathi | 17 February 2024


பஞ்சு மிட்டாய்களில் `ரோடமின்-பி (Rhodamine-B)' எனும் ரசாயனம் கலப்பதாகவும், இந்த ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய்களை அதிகளவில் உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வாய்பிருப்பதாவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாட்டிலும் அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்களில் ரோடமின்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் தற்போது பஞ்சுமிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

read more at

நாடு திரும்பினார் பிரதமர் மோடி; எய்ம்ஸ்-க்கு இன்று அடிக்கல்

Mallinithya Ragupathi | 16 February 2024


பிரதமர் மோடி, ஹரியானாவில் 9,750 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டங்களை இன்று துவங்கி வைக்கிறார். ஹரியானாவில் ரவேரியில் 1650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் குருகிராம் மெட்ரோ ரயில் திட்டம் (ரூ.5,450 கோடி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

read more at

புதுச்சேரியில் தொலைதூர ஐ.சி.யூ., திட்டம் துவக்கம்; கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்

Mallinithya Ragupathi | 16 February 2024


புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை 10 படுக்கைகள் கொண்ட தொலைதூர ஐ.சி.யூ., திட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்த தொலைதூர ஐ.சி.யூ., மையமானது புதுச்சேரியின் 5 மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட மருத்துவமனையின் ஐ.சி.யூ மருத்துவர் மற்றும் செவிலியர்களை தொலைதுாரத்தில் உள்ள ஐ.சி.யூ., சிறப்பு மருத்துவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவர். இதன்மூலம் ஐ.சி.யூ., நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.

read more at

பிரசாரம் செய்ய மாட்டேன் நடிகர் யஷ் திட்டவட்டம்

Mallinithya Ragupathi | 16 February 2024


2019 லோக்சபா தேர்தலில், கர்நாடக மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேட்சையாக களமிறங்கினார். நடிகர் யஷ் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். சுமலதா அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, நடிகர் யஷ் செய்தியாளர் சந்திப்பில் ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.

read more at

பெண் துப்புரவு தொழிலாளி கர்நாடகாவின் பெலகாவியில் மேயராகி அசத்தல்

Mallinithya Ragupathi | 16 February 2024


கர்நாடகாவில் பெலகாவி மாநகராட்சி மேயராக துப்புரவு பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜ., சார்பில், மேயர் பதவிக்கு போட்டியிட்ட சவிதா காம்ப்ளே, போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயர் சவிதா காம்ப்ளே, கன்னடம் பேசுபவர் அதனால் லோக்சபா தேர்தலில் கன்னட மொழி பேசுபவர்கள் ஓட்டுகளை கவரும் வகையில், பா.ஜ., சிறப்பாக திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

read more at

முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி

Mallinithya Ragupathi | 16 February 2024


முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா, நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

read more at

4 ராஜ்யசபா சீட்டுக்கு 5 பேர் போட்டி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிரடி

Mallinithya Ragupathi | 16 February 2024


கர்நாடகாவில் காலியாக இருக்கும் நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் ஐந்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் வெற்றியை தட்டிப்பறிக்க, ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிரடி வியூகம் வகுத்துள்ளது. தற்போது கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.

read more at

2வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு

Mallinithya Ragupathi | 14 February 2024


டில்லியில் இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், போலீசார் நடத்திய தாக்குதலில் 60 பேர் காயம் அடைந்துள்ளனர். டில்லி எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹரியானாவில் தொலைபேசி சேவைகள் தவிர மற்ற அனைத்து தொலைதொடர்பு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

read more at

பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்., மணி சங்கர் பேச்சு

Mallinithya Ragupathi | 13 February 2024


மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக உள்ளனர்,'' என, காங்., தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய சொத்தாக பாகிஸ்தான் உள்ளது. பாக்., மக்கள் மீது எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு என்றார். மணி சங்கருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., பிரமுகர் உதய் பி.கருடாச்சார் கூறியதாவது: நீங்கள் மற்றவர்களை முட்டாளாக்க நினைத்தால், மற்றவர்களும் உங்களை முட்டாளாக்க தான் நினைப்பார்கள் என்றார்.

read more at

பெங்களூர்: இனி எல்லாமே டபுள் டெக்கர் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

Mallinithya Ragupathi | 12 February 2024


பெங்களூருவில் சாலைகள் பெரும்பாலான நாட்கள் வாகன நெரிசலுடனே காணப்படுகின்றன. நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் கர்நாடக துணை முதலமைச்சர். பெங்களூருவில் மெட்ரோ வழித்தடங்களுடன் வாகன போக்குவரத்துக்கான மேம்பாலங்களும் (double-decker flyover) சேர்த்து கட்டமைக்கப்படும் என்றார். இந்த double-decker flyover-ல் மேல் தளத்தில் மெட்ரோ ரயில் செல்லவும், கீழ் தளத்தில் வாகனங்கள் செல்லவும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

புதுச்சேரி போலீசில் இ-புகார் பெட்டி செயலி துவக்கம்

Mallinithya Ragupathi | 10 February 2024


புதுச்சேரி போலீசார் பொதுமக்களிடம் இருந்து பெறும் புகார் மனுக்கள், கம்ப்யூட்டர் ஏதும் இன்றி பதிவேடுகளில் மட்டும் பதிவு செய்து வருகின்றனர் இதனை நவீன மயமாக்கும் முயற்சியாக இ- புகார் பெட்டி செயலி துவக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இ-ரோந்து (இ-பீட்) செயலியும் நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது.

read more at

அறுவை சிகிச்சை அறையில் வருங்கால மனைவியுடன் போட்டோஷூட்; மருத்துவர்மீது பாய்ந்தது நடவடிக்கை!

Mallinithya Ragupathi | 10 February 2024


கர்நாடகாவில் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில், மருத்துவர் ஒருவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன் திருமண போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இதனால் கர்நாடகா சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அந்த மருத்துவரை பணி நீக்கம் செய்துள்ளார்.

read more at

வெள்ளை அறிக்கை: மோடி அரசின் நேரடி அட்டாக்.. 15 முக்கிய விஷயங்கள்..!

Mallinithya Ragupathi | 10 February 2024


காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு காலப் பொருளாதாரச் செயல்பாடுகளை பாஜக தலைமையிலான 10 ஆண்டு காலப் பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சர் வெளியிட்டார். இந்த 'வெள்ளை அறிக்கை'யில் முக்கியமான 15 விஷயங்களை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை...

புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல் முதல்வர் நிகழ்ச்சி ரத்து

Mallinithya Ragupathi | 9 February 2024


அரியாங்குப்பம்: நல்லவாடு மீனவ கிராமத்தில் மீன் பிடி இறங்குதளம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு. நல்லவாடு கிராமத்தில் ஏற்கனவே இரண்டு மீன் பிடி இயங்குதளம் உள்ளன. எனவே, மூன்றாவது மீன் பிடி இறங்குதளம் வேண்டாம் எனவும், அதற்கு பதில் துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என நல்லவாடு மீனவர்கள் கோரிக்கை வைத்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த முதல்வர், நல்லவாடு பகுதியில் நடக்கவிருந்த மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

read more at

மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!

Mallinithya Ragupathi | 9 February 2024


மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் சுதந்திர இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வை போல் வேறு எப்போதும் ஆட்சி நடந்தது இல்லை. மாநிலங்களில் கவர்னர் மூலம் அடிமை ஆட்சியை நடத்த பா.ஜ., துடிக்கிறது. ஏற்கனவே புதுச்சேரியில் கிரண்பேடி எனது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினர். வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஓர் அணியில் நின்று பா.ஜ.,விற்கு சரியான பாடம் கற்பிக்கப்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.

read more at

'ஹூக்கா' புகைக்க கர்நாடகாவில் தடை

Mallinithya Ragupathi | 9 February 2024


பொது இடங்களில் புகையிலை மற்றும் 'ஹூக்கா' புகைக்க கர்நாடக அரசு உடனடி தடை விதித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய உலகளாவிய புகையிலை கணக்கெடுப்பில், கர்நாடகாவில் 22.8 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே, புகையால் ஏற்படும் நோய்களை கட்டுக்குள் கொண்டு வர, கர்நாடக அரசு முதல்கட்ட நடவடிக்கையாக கர்நாடகா முழுதும் உள்ள ஹூக்கா நிலையங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

read more at

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்த பிஜி துணை பிரதமர்

Mallinithya Ragupathi | 9 February 2024


அயோத்தி ராமர் கோயிலுக்கு முதன்முறையாக வெளிநாட்டு தலைவர் வருகை தந்து தரிசனம் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது. பிஜி நாட்டின் துணை பிரதமரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான பீமன்பிரசாத், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்துள்ளார்.

read more at

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை... காங்கிரஸ் பொருளாதார முறைகேடுகளை லிஸ்ட் போட்ட நிதியமைச்சர்!

Mallinithya Ragupathi | 9 February 2024


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 8 ) மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொருளாதார ரீதியாகச் செய்த தவறுகள் பற்றி நிதியமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த வெள்ளை அறிக்கை 10 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியக் குறிவைத்து சாடுவதற்காகவே வெளியிடப்பட்டது போல தெரிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

read more at

மத்திய அரசு நிதி கேட்டு டில்லியில் 3 முதல்வர்கள்! ஆர்ப்பாட்டம்...

Mallinithya Ragupathi | 9 February 2024


மாநிலங்களுக்கு வரி பங்கீடு உள்ளிட்ட நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டில்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்களும் பங்கேற்றனர். மேலும் இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க.,வும் சேர்ந்துள்ளன.

read more at

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி-20 நுாலக உச்சி மாநாடு துவக்கம்

Mallinithya Ragupathi | 8 February 2024


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் ஜி-20 நுாலக உச்சி மாநாடு துவங்கியது. இந்த மாநாடு அறிவு மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்காக நாடுகளை இணைக்கும் சர்வதேச மாநாடு என்ற பெயரில் நேற்று துவங்கியது. நாளை 9ம் தேதி வரை நடக்கும் இந்த நுாலக மாநாட்டில் ஜி-20 நாடுகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

read more at

ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வர் சம்பாய் சோரன் முடிவு

Mallinithya Ragupathi | 8 February 2024


ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

read more at

கோவை பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்கு பதிவு

Mallinithya Ragupathi | 7 February 2024


கோவையில் பிரபல பெண் ஓட்டுனர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. சத்தி ரோடு சிக்னல் சந்திப்பில் ஷர்மிளா போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனைக் கேட்ட எஸ்.ஐ ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

read more at

மகன் குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி சன்மானம்: சைதை துரைசாமி அறிவிப்பு

Mallinithya Ragupathi | 7 February 2024


'சட்லஜ் நதியில் கார் விழுந்த விபத்தில் மாயமான, மகன் வெற்றி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 1 கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்' என, ஹிமாச்சல் போலீசார் வாயிலாக, சைதை துரைசாமி வேதனையுடன் அறிவித்து உள்ளார்.

read more at

மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் சித்தராமையா போராட்டம்: பா.ஜ., பதிலடி

Mallinithya Ragupathi | 7 February 2024


கர்நாடகாவிற்கு முறையாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக்கூறி டில்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி மற்றும் பெங்களூருவில் பா.ஜ.க, ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் மத்திய அரசு வழங்கும் நிதியை, மாநில அரசு தவறாக பயன்படுத்தி ஊழல் செய்வதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர்.

read more at

ஸ்பெயினிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!!

Mallinithya Ragupathi | 7 February 2024


தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைப் பெறுவதற்காக, ஜனவரி 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்தப் பயணம் மூலம் ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றார். இறுதியாக, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, ``மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

read more at

வேங்கைவயல்: `வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற அறிக்கை அனுப்பவிருக்கிறோம்!' - தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர்

Mallinithya Ragupathi | 6 February 2024


புதுக்கோட்டையில் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்தகைய சம்பவம் நடந்து ஓராண்டைக் கடந்தும், இதுவரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் இந்த வழக்கில் சி பி ஐ விசாரணை அமைப்பு குற்றவாளிகளை நிச்சயம் கண்டுபிடிக்கும் என்றார்.

read more at

வெள்ள நிவாரணம் குறித்த விவாதம்: திமுக - பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதம்

Mallinithya Ragupathi | 6 February 2024


லோக்சபாவில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், 'தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத்தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம்' என பேசியபோது எல்.முருகன் தொடர்ந்து குறுக்கிட்டார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர்.பாலு, 'மத்திய அமைச்சர் தொடர்ந்து எனது பேச்சில் குறுக்கிடுகிறார். அவர் எம்.பி.,யாக பதவி வகிப்பதற்கே தகுதியற்றவர். அவரை வெளியே அனுப்புங்கள் என்றார். இதற்கு பட்டியலின மத்திய அமைச்சரை டி.ஆர்.பாலு தவறாக பேசியதாக பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

read more at

உச்ச நீதிமன்றத்தில் குவிந்துள்ள நிலுவை வழக்குகள்: 80 ஆயிரத்தை தாண்டியது!

Mallinithya Ragupathi | 6 February 2024


உச்சநீதிமன்றத்தில் மட்டும் ஜனவரி மாத நிலவரப்படி, 80,221 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது. இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1.10 லட்சமாக உள்ளது.

read more at

மாணவர்களுக்கு சர்ச்சை பாடம்?: மத்திய கல்வி வாரியம் விளக்கம்!

Mallinithya Ragupathi | 5 February 2024


புதுடில்லி: ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தகத்தில், 'டேட்டிங்' தொடர்பான பாடம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. ஆனால், இது தங்களுடைய புத்தகம் அல்ல என, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. அதில் சி.பி.எஸ்.இ., எந்த ஒரு புத்தகத்தையும் வெளியிடுவதில்லை. மேலும், தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் அங்கீகரிப்பதில்லை. இந்த குறிப்பிட்ட புத்தகம், தனியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

read more at

போக்குவரத்து நெரிசல் நகரங்கள்: பெங்களூருக்கு ஆறாவது இடம்

Mallinithya Ragupathi | 5 February 2024


கடந்த 2023ம் ஆண்டில், உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை டாம் டாம் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. முதலிடத்தில் பிரிட்டனின் லண்டன் உள்ளது. இந்த பட்டியலில், கர்நாடக தலைநகர் பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு, 10 கி.மீ., துாரத்தை கடக்க சராசரியாக ஆகும் நேரம், 28 நிமிடங்கள்10 வினாடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

read more at

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்

Mallinithya Ragupathi | 5 February 2024


மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, லடாக்கில் நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். 2019 ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடனும் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது எங்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லை எனவும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

read more at

இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் விவசாயிகள் சங்கம் கருத்து

Mallinithya Ragupathi | 3 February 2024


இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என, புதுச்சேரி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் கீதநாதன் கூறியதாவது மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான உரமானியம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது மற்றும் சம்பளம் 600 ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

read more at

போர் கப்பல்களில் பெண் அதிகாரிகள்

Mallinithya Ragupathi | 3 February 2024


போர் கப்பல்களிலும் பெண் அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது தவிர சிறப்பு கடற்படை விமான இயக்க நடவடிக்கைகளிலும் பெண்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்தியராணுவ இணையமைச்சர் அஜய் பட் நேற்று நடைபெற்ற பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் கூறியுள்ளார்.

read more at

`சாதி, மதம் அற்றவர்' சான்றிதழ் விவகாரத்தில் நீட்டிக்கும் சிக்கலும் குழப்பமும்

Mallinithya Ragupathi | 3 February 2024


தங்கள் குழந்தைகளுக்கு `சாதி, மதம் அற்றவர்' என்ற சான்றிதழ் வழங்கக்கேட்டு அரசிடம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. அதேசமயம் இந்த சான்றிதழ் தொடர்பான சர்ச்சைகளும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கூறியதாவது சாதி மதம் அற்றவர்' என்ற சான்றிதழ் வாங்க நினைப்பது நல்ல எண்ணம் என்றாலும், அதனால் தனிப்பட்ட உரிமைகள், அரசின் இட ஒதுக்கீடுகள் பெறுவதில் சிக்கல்கள் எழும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கிறது என்றார்.

read more at

வருமான வரி விகிதம் நோ மாற்றம்! : மத்திய நிதி அமைச்சர்

Mallinithya Ragupathi | 2 February 2024


நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் வரி சலுகைகள் நிச்சயமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார். வருமான வரி விகிதம், உச்ச வரம்பு எதையும் மாற்றாமல் அடுத்து வரும் மாதங்களுக்கான அரசின் செலவுகளுக்கு நிதி பெற மட்டும் இந்த பட்ஜெட்டை அவர் வழங்கியுள்ளார். வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கும், வரி வருவாய் மூன்று மடங்கும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் , நாட்டின் வளர்ச்சிக்காக இவை முறையாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

read more at

ஞானவாபி மசூதி: ``வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுகிறது!" - ஒவைசி

Mallinithya Ragupathi | 1 February 2024


உத்தரபிரதேசத்தில் ஞானவாபி மசூதி இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாக AIMIM கட்சியின் தலைவர் தெரிவித்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஞானவாபி மற்றும் மதுரா மசூதி தொடர்பாக இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

read more at

ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் கைது

Mallinithya Ragupathi | 1 February 2024


ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று அமலாக்க துறையினர் முதல்வர் சோரனை கைது செய்தனர். உடனடியாக கவர்னர் மாளிகைக்கு சென்ற சோரன், கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரனை, முதல்வராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

read more at

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Mallinithya | 31 January 2024


இந்த ஆண்டிற்கான‌ பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மற்றும் கடைசி கூட்டத் தொடர் என்பதால் இதனை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்

read more at

நிதிஷ்குமாரின் முடிவு; பிரசாந்த் கிஷோரின் கணிப்பு

Mallinithya | 30 January 2024


கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகாரின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்றார்.

read more at

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றம்

Mallinithya | 30 January 2024


பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் என்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

read more at

மதுரை எய்ம்ஸ்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

Mallinithya | 30 January 2024


மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் மருத்துவமனை அமைய உள்ளது.

read more at

ஆ.ராசாவை வீழ்த்த பாஜக களமிறக்கப்போகும் வேட்பாளர் யார் தெரியுமா?

Mallinithya | 30 January 2024


மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பல்வேறு வழிகளில் ஆ.ராசா மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதால் தமிழக முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைமை களமிறக்க முடிவு செய்துள்ளது.

ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Mallinithya | 30 January 2024


குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு; முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

Mallinithya | 29 January 2024


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்பெயினில் இன்று (29.01.2024) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

read more at

சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்- சீமான்

Mallinithya | 29 January 2024


இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடிவிட்டு பனம் பால், தென்னம்பால் வழங்குவேன் மற்றும் சிஎஸ்கே என்ற ஒரு அணி உள்ளது. அதில் ஒருவர் கூட தமிழர் இல்லை, நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழக வீர்ர்களாக இருப்பார்கள் என சீமான் கூறியுள்ளார்.

புவனகிரிக்கு வரும் குடியரசு துணைத் தலைவர்; மீண்டும் ஒரு சர்ச்சை

Mallinithya | 29 January 2024


குடியரசு துணைத் தலைவர் திங்கட்கிழமை சிதம்பரத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்யவுள்ளார். புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவில் பொது கோவிலாகும் இந்தக் கோவிலையும் இதனை ஒட்டியுள்ள 1.25 ஏக்கர் நிலத்தையும் பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார் என்றும், இந்த கோவிலில் வழிபட பொதுமக்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதால் சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி வருகை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

read more at

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு

Mallinithya | 29 January 2024


டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 044-25954905 மற்றும் 044- 28510537-044 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

read more at

காலையில் ராஜினாமா மாலையில் பதவியேற்பு; அரசியல் பரபரப்பில் பீகார்

Mallinithya | 29 January 2024


நேற்று ஆளுநரிடம் ராஜினமா கடிதத்தை அளித்தார் பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த 2 மணி நேரத்தில் பாஜக ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரி இருந்தார். இந்நிலையில் காலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார். காலையில் ராஜினாமா, மாலையில் பதவியேற்பு என அரசியல் பரபரப்பில் சிக்கியுள்ளது பீகார்.

read more at

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

Mallinithya | 29 January 2024


காரைக்காலில் மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தியும் மீனவர்கள் கடந்த 25 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

read more at

எங்கள் எய்ம்ஸ் எங்கே?

Mallinithya | 27 January 2024


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் “மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்து வைக்க இன்று வரை எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

read more at

மக்களவைத் தேர்தல்; கடந்தாண்டை விட அதிகரித்த வாக்காளர்கள்!

Mallinithya | 27 January 2024


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 96 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

read more at

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்பெயின் பயணம்!

Mallinithya | 27 January 2024


அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. இதற்காக இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்கிறார். பின்பு அங்கிருந்து ஸ்வீடன் சென்று அதன் பிறகு ஸ்பெயின் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.

read more at

2023-24ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது!!

Mallinithya | 25 January 2024


மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது" வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோ.சித்தர், கே.வெ.பழனிச்சாமி, கு. எழிலன் ஆகியோருக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

read more at

2023 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது; தமிழக அரசு அறிவிப்பு

Mallinithya | 25 January 2024


தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கு முனைவர் அரங்க. இராமலிங்கம், கொ.மா.கோதண்டம், முனைவர் சூர்யகாந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கு ஞா. மாணிக்கவாசகன், பேராசிரியர் சண்முகசுந்தரம், கவிஞர் ச. நடராசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

read more at

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு 'ஜெய்பீம்'

Mallinithya | 25 January 2024


கடலூரில் 2015 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக காவல்துறையினர் சுப்பிரமணிம் என்பவரை அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவரை கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையிலே சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையெடுத்து அவரது மனைவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் 11.01.2024 ல் அவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஜெய்பீம் படம் பாணியில் மீண்டும் ஒரு கொலை அரங்கேறியுள்ளது.

read more at

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன கொடியேற்றம்:

Mallinithya | 25 January 2024


கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது. நிகழாண்டு 153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நேற்று (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.25) நடைபெறுகிறது.

read more at

‘மனிதம் தாண்டி புனிதம் இல்லை’ - ஒற்றுமைக்கு அடையாளமான இஸ்லாமிய குழந்தை!

Mallinithya | 24 January 2024


ராமர் கோயில் திறப்பு அன்று உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராமர் கோயில் திறப்பு அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு, அவரின் பாட்டி ‘ராம் ரஹிம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். “இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கவே இந்தப் பெயரை சூட்டினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

read more at

ஆளுநர் தேநீர் விருந்து; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Mallinithya | 24 January 2024


குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளிப்பது குறித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. பொதுவாக இதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் கலந்து கொள்வது வழக்கம்.

read more at

நீலகிரியில் ‘0’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Mallinithya | 24 January 2024


நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகாலையில் பனியின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உறை பணி சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ‘0’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

read more at

தமிழகத்தின் பொறுப்பு முதல்வராகிறார் உதயநிதி..

Mallinithya | 24 January 2024


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் செய்ய உள்ளார். இதற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது பொறுப்பு முதலமைச்சர் பதவியே உதயநிதிக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு!

Mallinithya | 24 January 2024


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்டமான ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தினை' இன்று (24.01.2024) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த மைதானத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

read more at

மீண்டும் பதற்றம்; ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை நிறுத்திய காவல்துறை

Mallinithya | 23 January 2024


ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ எனும் பெயரில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள படாதிராவதான் கோயிலுக்குள் நேற்று ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஜோராபட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலைந்துரையாடல் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

read more at

ஆளுநர் விழாவிற்கு வருபவர்களுக்கே வருகைப் பதிவு; அண்ணா பல்கலைக்கழகம்!!

Mallinithya | 23 January 2024


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். ஆளுநர் விழாவில் அதிக மாணவர்களைப் பங்கேற்க செய்யும் வகையில் விழா அரங்கிற்கு உள்ளே சென்று விழாவிற்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு கொடுக்கப்படும் படி அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

read more at

‘வெல்லும் ஜனநாயகம்’

Mallinithya | 23 January 2024


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் வரும் 26 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழாவாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல கூட்டணிக் கட்சியினரும், அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

read more at

மாநில மகளிர் கொள்கை; தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Mallinithya | 23 January 2024


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கவும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கவும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பன போன்ற அம்சங்கள் உள்ளடக்கியது.

read more at

'ஆபாச அண்ணாமலை கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Alan klindan | None


பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போது.. இப்படித்தான் எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் உதயநிதியிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்

read more at

ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு:

Mallinithya | 22 January 2024


அயோத்தி ராமர்கோயில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி உயிரூட்டப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜையை செய்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்த்பென் படேல், யோகி ஆதித்யநாத்தும் வழிபாடு செய்தனர்.

read more at

அறிஞர் அண்ணாவின் வசனத்தை பேசி அசத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Mallinithya | 22 January 2024


திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நேற்று (ஜன. 21) நடைபெற்றது. இம்மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 'தங்கத்தால் கோட்டை கட்டி' என்று தொடங்கும் அறிஞர் அண்ணாவின் வசனத்தை மூச்சு விடாமல் பேசினார். ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதமராக்க வேண்டும் எனக் கை காட்டுகிறது. அப்படி பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம். அதையும் ஒரு கை பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.

read more at

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு!

Mallinithya | 22 January 2024


இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

read more at

உலக சாதனை படைத்த திமுக இளைஞர் அணி மாநாட்டு அரங்கம்!

Mallinithya | 22 January 2024


திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நேற்று (ஜன. 21) நடைபெற்றது. சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் 'மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம்' என்று யுனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (Unique World Records) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

read more at

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - குஷ்பு விளாசல்

Mallinithya | 20 January 2024


ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே உள்ள சிறுமிக்கு கொடுமை நடந்திருக்கிறது. ஆளுங்கட்சியினர் வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுகவிற்கு மட்டும் இன்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இது முதலமைச்சருக்கும் தெரியும்.பிரச்சினையை பார்த்து விட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் இதை பற்றி எதுவும் பேசினாரா? ஆறுதல் சொன்னாரா? - குஷ்பு விளாசல்.

நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு..

Mallinithya | 20 January 2024


சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் மாநாடு திடலுக்கு வருகிறது. பின்னர், தமிழகம் முழுவதிலும் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுப்பயணம் வந்த 1,500 பேர் மேற்கொண்ட இருசக்கர வாகனங்கள் மாநாட்டு திடலுக்கு வருகிறது. இதை அடுத்து மாநாட்டு திடல் அருகில் ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது.

ராமேஸ்வரம் வரும் பிரதமர்; தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு?

Mallinithya | 20 January 2024


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

read more at

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பட்டுவேட்டியுடன் பிரதமர் மோடி சாமி தரிசனம்

Mallinithya | 20 January 2024


ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இதற்காக இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பட்டுவேட்டி கட்டி வந்து மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுகவில் இணைந்தார்!

Ragupathi | 18 January 2024


பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து காயத்ரி ரகுராம் கட்சியில் சேர்ந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்.

read more at

சிறப்பு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!

Mallinithya | 19 January 2024


பிரதமர் மோடி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் ஸ்ரீராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது. நினைவு தபால் தலையும், இந்தப் புத்தகமும், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேகத்தின் மங்களகரமான நிகழ்வை பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்” என பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

read more at

“500 ஆண்டுகால காத்திருப்பு நிறைவேறியது” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Mallinithya | 17 January 2024


அயோத்தியில் ராமர் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது.கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7000 சிறப்பு விருந்தினர்களுக்கும்,குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்துள்ளனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

read more at

‘ஸ்டார்ட்அப் பட்டியலில் தமிழகம் முதலிடம்’

Mallinithya | 17 January 2024


டெல்லியில் ஸ்டார்ட்அப் விருதுகள் மற்றும் மாநில தரவரிசை விருதுகள் வழங்கும் விழா நேற்று (16-01-24) நடைபெற்றது. அதில், தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சிறந்த செயல்திறனுக்காக 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

read more at

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரானார் ஒய்.எஸ். ஷர்மிளா!

Mallinithya | 16 January 2024


ஆந்திர மாநில முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தற்போது நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார்.இதனைத் தொடர்ந்து இவர், கடந்த 4 ஆம் தேதி காங்கிரஸில் இணைந்தார். இந்த நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் புதிய தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

read more at

பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டம்; 100 பேர் கைது

Raghu | 11 January 2024


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் சிரமத்தை கருத்தில

read more at

நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனை எதிர்த்து போட்டி; நடிகர் மன்சூர் அலிகான் திட

Raghu | 11 January 2024


தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

'திமுக மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள்'

Raghu | 11 January 2024


இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், 'பத்தாண்டு காலம் பிரதமர் மோடி ஒரு சிறப்பான ஆட்சியை இந்திய திருநாட்டிற்கு தந்து கொண்டிருக்

read more at

நடிகர் ரஜினிகாந்த்துடன் துரை வைகோ சந்திப்பு

Raghu | 11 January 2024


நடிகர் ரஜினிகாந்த்தை இன்று (10.01.2024) மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்த

read more at

மோடிக்கு நிகர் ராகுல் இல்லை? - கார்த்தி சிதம்பரத்திற்கு காங். நோட்டீஸ்

Raghu | 10 January 2024


காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவ்வப்பொழுது சர்ச்சைக்குரிய வகையில் பேசு

read more at

முரசொலி நிலம் வழக்கு; ஆணையம் விசாரிக்க உத்தரவு

Raghu | 10 January 2024


முரசொலி நிலம் தொடர்பான வழக்கை பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.  முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில்

read more at

லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; அமலாக்கத்துறை நடவடிக்

Raghu | 10 January 2024


பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந

read more at

மாலத்தீவு விவகாரம் குறித்து அண்ணாமலை!

Raghu | 10 January 2024


இந்திய பிரதமர், அண்மையில் லட்சத்தீவுக்கு அரசு முறை பயணமாகச் சென்று வந்தார். அவர் சென்று வந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து

read more at

சாதி மறுப்பு திருமணத்தால் இளம்பெண் படுகொலை; பெற்றோர் கைது

Raghu | 10 January 2024


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). அந்த ஊருக்கு பக்கத்து ஊரான பூவாளூர் கிரா

read more at

“தொழிலாளர் சங்கங்கள் வைத்த இரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது”

Raghu | 10 January 2024


போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் , வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக

read more at

"பள்ளி கல்லூரிக்கு ஹஜாப் அணிய தடை" ஆட்சிக்கு வந்தவுடன் தடையை உடைத்த காங்கிரஸ்

Alan klindan | 3 January 2024


கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் உள்ள ரோட்ரி உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஹஜாப் அணிந்து வந்த சிறுமியை அனுமதிக்க மறுத்து பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு என்ன உடை அணிய வேண்டும் என்பது தனிமனித உரிமை. ஹிஜாப் தடையை காங்கிரஸ் அரசு மீட்டுக்கொள்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என அறிவித்துள்ளது

read more at

அமெரிக்க அதிபர் தேர்தல்; விவேக் ராமசாமி திடீர் விலகல்!

Mallinithya | 16 January 2024


இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவார் எனக் சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது.அதே கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமி போட்டியிடுவதாக அறிவித்தார்.மேலும் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. திடீரென அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்றிரவு நான் எனது பிரச்சாரத்தை நிறுத்துகிறேன்.டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

read more at

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

Mallinithya | 16 January 2024


ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று காலை 8:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.அதே சமயம் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான், ஜப்பான்,ரஷ்யா,மியான்மர் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

read more at

“அப்படியெல்லாம் சொல்ல முடியாதுங்க...” - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சலசலப்பு

Mallinithya | 16 January 2024


‘ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது உரிமையாளர்களின் பெயரோடு ஜாதிப் பெயர் சொல்லி மாடுகளை அவிழ்க்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது .பாலமேடு பகுதியில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், காளையின் உரிமையாளர் தனது பெயரோடு ஜாதிப் பெயரை சேர்த்து சொல்லுமாறு வர்ணனையாளரிடம் கூறினார் அதற்கு அவர்,அப்படியெல்லாம் சொல்லமாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

read more at

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Mallinithya | 17 January 2024


மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம்.மும்மொழி கொள்கை என்பது திணிப்பு தான் இதுவே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் என்றார்.

read more at

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Mallinithya | 17 January 2024


அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

read more at