விளையாட்டு

WPL 2024: தர்ம அடி வாங்கிய குஜராத்.. மெகா வெற்றி பெற்ற ஆர்சிபி

Mallinithya Ragupathi | 28 February 2024


2024 மகளிர் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று குஜராத் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி. இந்த வெற்றியை அடுத்து பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

read more at

முதல் டெஸ்டில் தோற்பது தான் ராசியே...இந்திய அணியின் செயல்பாடு

Mallinithya Ragupathi | 27 February 2024


இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்வாறு முதல் போட்டியில் தோற்று பின்னர் தொடரை கைப்பற்றுவது இந்தியாவுக்கு ஏழாவது முறையாகும்.

read more at

இலங்கை கேப்டனுக்கு தடை...ஐசிசி அதிரடி நடவடிக்கை..

Mallinithya Ragupathi | 26 February 2024


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அம்பயர் நோ பால் கொடுக்காததால் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார் T20 இலங்கை அணி கேப்டன் ஹசரங்கா. இதனால் ஹசரங்காவிற்கு அடுத்த இரண்டு போட்டிகள் ஆட தடை விதித்து இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

read more at

15 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வை எதிர்கொள்ளும் ஆர்சிபி

Mallinithya Ragupathi | 24 February 2024


ஐபிஎல் 2024 முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் 15 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு நடந்து வரும் சோகம் மறையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

read more at

காவ்யா மாறன் எடுத்த முடிவு தப்பாகிப் போச்சே...20.50 கோடிக்கு ஆப்பு

Mallinithya Ragupathi | 23 February 2024


2024 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் 20.50 கோடிக்கு வாங்கபட்டார் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையான டி20 போட்டியில் அதிக ரன்களை வாரிக் கொடுத்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார். இதனால் காவ்யா மாறன் தவறான முடிவை எடுத்து விட்டதாக தற்போது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

read more at

ஜெர்மனியின் கால்பந்து ஜாம்பவான் காலமானார்..

Mallinithya | 21 February 2024


கால்பந்து உலகின் முன்னணி வீரர்களின் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் பெரேம் காலமானார். 1990 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது. இந்த கோலை இவர் தான் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

read more at

சிஎஸ்கே அணிக்கு வருகிறாரா சர்பராஸ் கான்? காய் நகர்த்தும் தோனி, கம்பீர்

Mallinithya | 21 February 2024


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்பராஸ்கானை எப்படியாவது தங்கள் அணிக்குள் இழுக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஐபிஎல் அணியும் போட்டி போட்டு வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் இவரை தங்கள் அணியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

read more at

2 முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ.. 4வது டெஸ்டில் ட்விஸ்ட்

Mallinithya Ragupathi | 21 February 2024


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இரண்டு முக்கிய வீரர்களை நீக்கி இருக்கிறது பிசிசிஐ. கே.எல். ராகுல் இன்னும் உடற்தகுதி பெறவில்லை என்றும் மேலும் பும்ராவை நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்விற்காக நீக்கி இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 அன்று துவங்க உள்ளது.

read more at

லோக்சபா தேர்தலில் சுப்மன் கில்.. 70 சதவீத வாக்குகளுக்கு குறி..

Mallinithya Ragupathi | 20 February 2024


நாடு முழுவதும் பிரபலமான வீரராக இருக்கிறார் சுப்மன் கில். இதனால் பஞ்சாப் மாநில தேர்தல் அமைப்பு அவரை அந்த மாநிலத்தின் தேர்தல் தூதுவராக பயன்படுத்த உள்ளது. வாக்கு செலுத்துவதன் முக்கியத்துவத்தை இளம் வாக்காளர்களிடம் பரப்புவதே அவரின் முக்கிய பணி என பஞ்சாப் மாநில தேர்தல் அமைப்பு கூறி உள்ளது. சுப்மன் கில்லுக்கு 24 வயதே ஆகும் நிலையில் இது அவரது இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அதிலேயே தேர்தலுக்கான தூதுவராகி இருக்கிறார் சுப்மன் கில்.

read more at

முதல்முறையாக ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியா.. பிவி சிந்து தலைமையில் வெற்றி

Mallinithya Ragupathi | 19 February 2024


நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி 3-2 புள்ளிகள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணியின் இளம் குழு, அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி வெற்றி பெற்றது.

read more at

92 வருட இந்திய கிரிக்கெட் சரித்திரத்திலேயே பிரம்மாண்ட வெற்றி.. சாதித்த ரோஹித் சர்மா

Mallinithya Ragupathi | 19 February 2024


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 577 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணியின் வரலாற்றிலேயே ரன்கள் வித்தியாசத்தில் இதுதான் பெரிய வெற்றி ஆகும். அதே போல இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது மோசமான தோல்வி ஆகும்.

read more at

வெளியேறிய அஸ்வின்.. ஐசிசி விதியால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு...

Mallinithya Ragupathi | 17 February 2024


ரவிச்சந்திரன் அஸ்வினின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். ஐசிசி விதிப்படி ஒரு வீரர் வேறு காரணத்திற்காக டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகினால் அவருக்கு மாற்று வீரரை அணியில் சேர்க்க அனுமதி இல்லை. அதே சமயம், ஃபீல்டிங் செய்ய மட்டுமே மாற்று வீரரை சேர்க்கலாம். எனவே, அஸ்வின் பாதி போட்டியில் விலகியதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

read more at

இந்திய மண்ணில் எந்த வீரரும் செய்யாத மெகா பேட்டிங் ரெக்கார்டு.. பொளந்து கட்டிய இங்கிலாந்து வீரர்

Mallinithya Ragupathi | 17 February 2024


இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சில் கோட்டை விட்டது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் 139 பந்துகளில் 153 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிவேக 150 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்.

read more at

பும்ராவை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த ஆப்பை ரெடி செய்த ரோகித்

Mallinithya Ragupathi | 15 February 2024


மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்திருந்தது. ஆனால் ரோகித் சர்மா, இந்தியா இங்கிலாந்து தொடரில் அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியம் என கூறிவிட்டார். பும்ராவும் தனக்கு மும்பையின் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதாக முடிவெடுத்து இருக்கிறார். இதனால் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால் மும்பையின் சில போட்டிகளில் விளையாட முடியாது. இப்படி ஒரு பிரச்சனை நிகழும் என தெரிந்தே ரோகித்தும் பும்ராவும் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

read more at

ஹர்திக் பாண்டியா மட்டும் ஸ்பெஷலா? குத்திவிட்ட ரோகித் சர்மா...பிசிசிஐ விளக்கம்

Mallinithya Ragupathi | 15 February 2024


ரஞ்சிக்கோப்பையில் விளையாடாமல் பயிற்சி செய்யும் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை கொடுத்திருக்கும் போது ஹர்திக் பாண்டியா மட்டும் தனியாக பயிற்சி செய்ய அனுமதிப்பது ஏன் என்று ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளுக்கு கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அதற்கு பிசிசிஐ, ஹர்திக்கிற்கு உடல் தகுதி ஏற்ற வகையில் இல்லை. அது மட்டுமல்லாமல் ஐசிசி தொடர்களில் ஹர்திக்கின் முழு உடல் தகுதி இந்திய அணிக்கு தேவை என்பதால் ரஞ்சிக்கோப்பையில் ஹர்திக்கிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என விளக்கம் அளித்துள்ளது.

read more at

டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. ஜெய்ஷா உறுதி

Mallinithya Ragupathi | 15 February 2024


நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வோம். ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றுவோம் என்றார். ஜெய்ஷா, ரோகித் சர்மா தான் டி20 அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார் என்பதை தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்துவிட்டார்.

read more at

ஐபிஎல்-இல் சொதப்பினால்.. இந்திய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ.. டி20 உலகக்கோப்பை அதிரடி பிளான்

Mallinithya Ragupathi | 14 February 2024


டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி, 2024 ஐபிஎல் தொடரின் இடையே தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே, ஐபிஎல் தொடரிலும் ஆடி விட்டு, ஓய்வே இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சியையும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இந்திய வீரர்கள். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்படும். ஐபிஎல் லில் சரியாக ஆடாத வீரர்கள் ஓய்வே இல்லாமல் பயிற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

read more at

கேஎல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்படும் முன் நடந்த சம்பவம்.. காய்ச்சி எடுத்த பிசிசிஐ

Mallinithya Ragupathi | 14 February 2024


கே எல் ராகுல் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்தால் அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது அவர் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்கவில்லை என்றால் ரசிகர்கள், பிசிசிஐ மீது தான் பாய்வார்கள். அதன் காரணமாகவே பிசிசிஐ கே எல் ராகுல் மீது அதிருப்தியில் உள்ளது.

read more at

சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு.. இனி வட இந்தியாவிலும் சிஎஸ்கே ரசிகர்கள்

Mallinithya Ragupathi | 14 February 2024


இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வட இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்கள் இல்லை. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதை அந்த அணியின் ரசிகர்கள் பலர் விரும்பவில்லை. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களாக இனி இருக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். அவர்களை தங்கள் அணியின் ரசிகர்களாக மாற்றும் ஒரு முயற்சியாக சிஎஸ்கே அணி கத்ரினா கைஃப்பை தூதராக நியமித்து இருக்கிறது.

read more at

கிரிக்கெட் வீரரை நோக்கி சென்ற பாஜக.. பஞ்சாப்பை பிடிக்க பலே திட்டம்

Mallinithya Ragupathi | 14 February 2024


இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக யுவராஜ் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். இதனால் யுவராஜ் சிங் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது ஆனால் தற்பொழுது மத்திய அமைச்சரை சந்தித்து மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.

read more at

CSK க்கு மீண்டும் வருகிறதா தடை? பிசிசிஐயின் எதிரியுடன் கைக்கோர்க்கும் ஸ்ரீனிவாசன்? கோபத்தில் ஜெய்ஷா

Mallinithya Ragupathi | 14 February 2024


இங்கிலாந்தில் நடத்தப்படும் The Hundred தொடரை முற்றிலுமாக மாற்றி ஐபிஎல் க்கு போட்டியாக மாற்றும் முயற்சியில் லலித் மோடி ஈடுபட்டு வருகிறார். இதில் டிவிஸ்டே லலித் மோடியுடன் சிஎஸ்கே அணியின் நிறுவனர் சீனிவாசன் கைகோர்க்க போகிறார் என்பது தான். இதுதற்போது ஜெய்ஷா கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

read more at

மெஸ்ஸி, ரொனால்டோ கூட இந்த வயதில் இவ்வளவு கோல்கள் அடித்ததில்லை.. 23 வயது வீரருக்கு பாராட்டு

Mallinithya Ragupathi | 14 February 2024


இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் 22 வயதான நார்வே வீரர் ஏர்லிங் ஹாலாண்ட் நடப்பு சீசனில் அபாரமாக விளையாடி 16 கோல்களை அடித்திருக்கிறார். இந்த சீசனில் மட்டும் ஹாலாண்ட் 21 கோல்களையும் ஆறு அசிஸ்ட்களையும் அடித்திருக்கிறார். அவருடைய வயதில் மெஸ்ஸி அல்லது ரொனால்டோ இந்த அளவிற்கு கோள் அடித்தது கிடையாது என்று பெப் கார்டியோலா கூறி இருக்கிறார்.

read more at

அமித்ஷாவுடன் ஹர்திக் பாண்டியா திடீர் சந்திப்பு.. ரோகித்துக்கு ஆப்பு.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்?

Mallinithya Ragupathi | 13 February 2024


ரோகித் சர்மா மீண்டும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடப் போகிறேன் என முடிவு எடுத்து கேப்டன் பதவிக்கு திரும்பி விட்டார். இதனால் ஹர்திக்கின் இந்திய டி20 அணியின் கேப்டன் கனவு பறிபோனது. இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஹர்திக் சந்தித்து இருக்கிறார். இந்திய அணியின் கேப்டனாக ஆவதற்கு ஹர்திக் இந்த சந்திப்பை பயன்படுத்தி இருக்கலாமோ என்று நம்பப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி கேப்டன் பொறுப்பில் மாற்றம் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

read more at

அரசியல் ஆஃபர் வந்துருக்கு.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. சவுரப் திவாரி அறிவிப்பு!

Mallinithya Ragupathi | 13 February 2024


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜார்க்கண்ட் வீரர் சவுரப் திவாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர்: அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கட்சிகள் தரப்பில் அணுகி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுதான் ஓய்வு பெறுவதற்கு சரியான் நேரமாக கருதுகிறேன். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார். இந்த ரஞ்சி டிராபி தொடருடன் சவுரவ் திவாரி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

read more at

அண்டர் 19 உலக கோப்பை - அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்தவர்கள் லிஸ்டில் இந்தியா ஆதிக்கம்

Mallinithya Ragupathi | 13 February 2024


அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தை இந்தியா தக்க வைத்துள்ளது முதல் இடத்தில் உதை சகாரன், இரண்டாம் இடத்தில் முசிர்கான், மூன்றாம் இடத்தில் சச்சின் தாஸ். இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த அணி பட்டியலிலும் இந்தியா தான் முதல் ஐந்து இடத்தில் மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.

read more at

கேப்டன் பதவிக்காக அடித்து கொள்ளும் ரோகித், ஹர்திக்.. அறிவுரை சொன்ன தோனி

Mallinithya Ragupathi | 13 February 2024


மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேப்டன் பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் தலைமை பதவியில் இருப்பவர்கள் மரியாதையை சம்பாதிப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள தோனி மரியாதை என்பது நமது பதவிக்காக வரும் விஷயமல்ல நமது செயல்பாடுகளால் மட்டுமே அது கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

read more at

முற்றிய மோதல்.. ரோஹித் சர்மாவை அன்ஃபாலோ செய்த ஹர்திக் பாண்டியா?

Mallinithya Ragupathi | 12 February 2024


மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் இருப்பது இலை மறை காய் மறையாக இருந்து வந்த நிலையில், தினமும் ஒரு அதிரடி தகவல் வெளியான வண்ணம் உள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவை சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

read more at

26 வருட வரலாறை காட்டி அழுத்தம் கொடுத்த ஆஸ்திரேலியா.. தவித்துப் போன இந்திய வீரர்கள்..

Mallinithya Ragupathi | 12 February 2024


ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 253 ரன்கள் குவித்தது. இதுவரை அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான். 26 ஆண்டு கால அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி சாதனையை முறியடிக்க வேண்டிய அழுத்தத்துடன் இந்திய அணி சேஸிங் செய்யத் துவங்கியது. பின்னர் இந்திய அணி 122 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. ஆஸ்திரேலியாவின் திட்டம் இந்திய அணியின் மோசமான விக்கெட் சரிவுக்கு வழி வகுத்தது.

read more at

கிரிக்கட்டையே ஆஸ்திரேலியா பேரில் எழுதுங்கோ.. 9 மாதங்களில் 3 இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி!

Mallinithya Ragupathi | 12 February 2024


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை மற்றும் யு19 உலகக்கோப்பை என்று 3 வகையான தொடர்களையும் 9 மாதங்களில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி பறிகொடுத்துள்ளது. இதனால் கிரிக்கெட்டையே ஆஸ்திரேலியா அணியின் பெயரில் எழுதி வைத்துவிடலாம் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

read more at

மும்பை இந்தியன்ஸ் அணியை பழிவாங்க வீரர்கள் கூட்டு சதி? ஹர்திக்கிற்கு பாடம் கற்பிக்க ரோகித் திட்டம்

Mallinithya Ragupathi | 10 February 2024


சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இதுவரை ரோகித் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதேபோன்று சூரியகுமார், பும்ரா தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி ரோகித் சர்மா மற்றும் பும்ரா தமக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக ஐபிஎல் தொடரிலிருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று சூரியகுமார் ஏற்கனவே காயம் காரணமாக உடல் தகுதியை மீட்கும் பணியில் இருக்கிறார். இதன்மூலம் ஹர்திக்கிற்கு பாடம் கற்பிக்கலாம் என்று இவர்கள் முடிவெடுத்து இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

read more at

சிஎஸ்கே-க்கு இறங்கிய இடி.. முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்

Mallinithya Ragupathi | 10 February 2024


டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து வீரர் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவர் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மிட்செலுக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. காயத்தின் தன்மை மிகவும் அதிகமாக இருப்பதால் அவர் ஐபிஎல் தொடருக்கு திரும்புவது சந்தேகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிஎஸ்கே அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

read more at

U19 World Cup : பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

Mallinithya Ragupathi | 10 February 2024


யு19 உலகக்கோப்பை தொடரின் அரைறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதன் மூலம் யு19 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் பிப்.11ஆம் தேதி நடக்கவுள்ள யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

read more at

ரோகித் சர்மா எந்த ஐபிஎல் அணியிலும் விளையாட முடியாது.. மும்பை வைத்த செக்!

Mallinithya Ragupathi | 8 February 2024


மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதனால் அவர் வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஐபிஎல் விதிப்படி ஒரு வீரர் ஒப்பந்தமான பிறகு அந்த அணியை விட்டு விலகி வேறு அணிக்கு செல்ல முயற்சித்தால் அவர் புகாருக்கு உள்ளாக்கப்படுவார். புகாருக்குள்ளான வீரர் அந்த ஐபிஎல் தொடரிலேயே விளையாட முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு ஐபிஎல் விதியை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித்திற்கு செக்கு வைத்து இருக்கிறது.

read more at

ஐசிசி தரவரிசை பட்டியல் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய வீரர்கள்..

Mallinithya Ragupathi | 8 February 2024


ஐசிசி பந்துவீச்சாளர்கான தரவரிசை பட்டியலில் தற்போது அஸ்வினை பின்னுக்குத் தள்ளி பும்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். பேட்ஸ் மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கவாஸ்கர், வெங்சர்கார், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ,அதிரடி வீரர் சேவாக், கம்பீர், விராட் கோலி ஆகியோரெல்லாம் முதலிடத்தில் இருந்திருக்கிறார்கள்.

read more at

மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல்.. ரோஹித் மனைவிக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா

Mallinithya Ragupathi | 8 February 2024


மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் சமீபத்தில் ரோஹித்தின் பணிச்சுமையை குறைப்பதற்காக கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக கூறி இருந்தார். ஆனால், இதில் நிறைய தவறு இருக்கிறது என ரோஹித்தின் மனைவி கூறி இருந்தார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டார் எனவும் மீண்டும் ரோஹித் கேப்டனாக செயல்படுவார் எனவும் செய்திகள் இருக்கும் நிலையில், ஹர்திக் தான் பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இது ரித்திகாவின் பதிவுக்கு பதிலடி பதிவு என கூறி வருகின்றனர்.

read more at

Under 19 WC Final-இந்தியா,பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. இது மட்டும் நடந்தால் பதிலடி தந்துவிடலாம்

Mallinithya Ragupathi | 7 February 2024


19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 2006 அண்டர் 19 உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் அடைந்த தோல்விக்கு பழித் தீர்க்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் சீனியர் உலகக்கோப்பை 2023 ல் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பழித் தீர்க்கும் விதமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

read more at

கனத்த இதயத்தோடு தமிழ் தலைவாஸ்.. பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனதால் சோகம்

Mallinithya Ragupathi | 7 February 2024


பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யுபி யுத்தாஸ் அணியை வீழ்த்தியது. ஆனால், இந்த வெற்றியால் எந்த பெரிய ஆரவாரமும் இல்லை. ஏற்கனவே, பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு இது ஆறுதல் வெற்றி தான்.

read more at

பழைய ஹேர் ஸ்டைலுடன் திரும்பும் தோனி.. CSK-க்காக பயிற்சி தொடக்கம்

Mallinithya Ragupathi | 7 February 2024


ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்காக‌ தோனி பயிற்சியை தொடங்கி இருக்கிறார். தோனி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நீளமான முடியை வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் ஆக இருந்தார். ஒரு கட்டத்தில் தோனி அந்த முடியை வெட்டும்போது அது தேசிய செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. இந்த நிலையில் தோனி தற்போது தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது அதே போல் ஒரு ஹேர் ஸ்டைலை வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

read more at

ஓவர் தலைக்கனம்.. இங்கிலாந்து திமீர் பேச்சு.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்

Mallinithya Ragupathi | 6 February 2024


வெற்றி பெறுவதற்கு முன்பே ஓவர் பேச்சை இங்கிலாந்து அணி பேசியதற்கு தற்போது தக்க பாடத்தை இந்திய வீரர்கள் கொடுத்திருப்பதாக இந்திய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஓவர் தலை கனத்துடன் இங்கிலாந்து அணி வீரர்கள் இருந்ததே இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவியதற்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதே போன்று திமீர் த்தனமாக இங்கிலாந்து வீரர்கள் இருந்தால் அடுத்தவரும் போட்டிகளிலும் தோல்வியை தழுவவே வாய்ப்பு இருப்பதாக இந்திய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

read more at

டிஆர்எஸ் தவறு என புலம்பிய ஸ்டோக்ஸ்.. தக்க பதிலடி தந்த தினேஷ் கார்த்திக்..

Mallinithya Ragupathi | 6 February 2024


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்திருக்கிறது. இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், டிஆர்எஸ் முடிவில் இங்கிலாந்து அணிக்கு தவறான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தினேஷ் கார்த்திக் தொழில்நுட்பத்தை யாரும் சந்தேகப்படத் தேவையில்லை என பதிலடி தந்திருக்கிறார்.

read more at

சுப்மன் கில்லை வெளியேற சொன்ன அணி நிர்வாகம்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட்

Mallinithya Ragupathi | 5 February 2024


சுப்மன் கில் கடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இந்திய அணியில் இருந்து வெளியேறி ரஞ்சி ட்ராபியில் பங்கேற்று ரன் குவித்தால் மட்டுமே அடுத்த தொடரில் அணியில் இடம் அளிக்கப்படும் என ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தனக்கு இருந்த கடைசி வாய்ப்பில், சதம் அடித்து அணியில் தன் இடத்தை இறுக்கிப்பிடித்துக் கொண்டுள்ளார் கில்.

read more at

இனி உலக கிரிக்கெட்டை ஆளப் போவது இந்த 2 வீரர்கள் தான்.. சேவாக் சூசகம்

Mallinithya Ragupathi | 5 February 2024


இந்திய கிரிக்கெட்டில் கடந்த பத்து ஆண்டுகள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், இனி இளம் இந்திய வீரர்களுக்கான காலம் என வீரேந்தர் சேவாக் கூறி இருக்கிறார். நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் மற்றும் கில்லின் திறமையை கண்டு அவர்களை பாராட்டிய சேவாக், இனி இந்த இருவரும் தான் அடுத்து உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள்." என குறிப்பிட்டு இருக்கிறார்.

read more at

பெரும் சோகத்தில் தமிழ் தலைவாஸ்.. ஆப்பு வைத்த குஜராத் ஜெயன்ட்ஸ்

Mallinithya Ragupathi | 5 February 2024


புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் முக்கியமான போட்டியில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்தித்தன. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோகும் என்ற நிலையில் களமிறங்கியது தமிழ் தலைவாஸ். ஆட்ட நேர இறுதியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இனி தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு 99.9 சதவீதம் முடிவுக்கு வந்து விட்டது.

read more at

சிஎஸ்கே-வுக்கு சிக்கல்? ஆபீஸுக்கு வந்த அமலாக்கத்துறை..

Mallinithya Ragupathi | 3 February 2024


ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதன் பின்னணியில் தோனி இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. இது 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

read more at

'கவாஸ்கருக்குப் பிறகு இவர்தான்!' - இரட்டை சதமடித்த ஜெய்ஷ்வால்!

Mallinithya Ragupathi | 3 February 2024


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்தியா பதிவு செய்த இரட்டை சத்தம் இதுவே ஆகும். சுனில் கவாஸ்கர், வினோத் காம்பளி போன்ற வீரர்களுக்கு அடுத்து குறைவான வயதில் இரட்டை சதத்தை அடித்த வீரர் எனும் சாதனையை ஜெய்ஷ்வால் படைத்திருக்கிறார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது.

அவசரமாக வெளிநாடு பறந்த விராட் கோலி.. டெஸ்ட் தொடர் சோலி முடிந்தது

Mallinithya Ragupathi | 2 February 2024


இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் இந்திய அணியில் இருந்து முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதும் அணிக்கு திரும்புவது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது மற்றும் விராட் கோலி தற்போது இந்தியாவிலேயே இல்லை என்ற தகவலும் கூறப்படுகிறது.

read more at

IND vs ENG : ஜெய் ஷா எடுத்த முடிவு.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்..

Mallinithya Ragupathi | 2 February 2024


இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தை காண ஜெய் ஷா வரவுள்ளார். இவரின் வருகை இந்திய அணி வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். அதற்கு காரணம், சமீபத்தில் இந்திய அணி முக்கிய தொடர்களில் எல்லாம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது தான். அரசியல் ரீதியாகவும் இந்திய அணி வெற்றிகரமான அணியாக இருப்பது முக்கியம் என்பதால் அவரின் வருகை இந்திய வீரர்களுக்கு அந்த வகையிலும் அழுத்தம் இருக்கக்கூடும்.

read more at

ஜெய் ஷா வைத்த ட்விஸ்ட்.. ஒரே கல்லில் 2 பதவிகள்..

Mallinithya Ragupathi | 1 February 2024


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக வேண்டும் என்றால் பிசிசிஐ பதவி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், ஜெய்ஷாவின் தந்தை அரசியலில் முக்கிய தலைவராக இருக்கும் நிலையில், இவர் அரசியலில் போட்டியிட வேண்டும் என நினைத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை தக்க வைக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி என இரண்டையும் தக்க வைத்துள்ளார்.

read more at

ஐசியூவில் உள்ள இந்திய வீரர்..

Mallinithya Ragupathi | 1 February 2024


மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மயங்க் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் அருந்தி இருப்பது தெரியவந்ததுள்ளது. இந்த நிலையில் மயங்க் அகர்வால் 48 மணி நேரத்திற்கு பேச முடியாது. புண்கள் மற்றும் வீக்கம் குறைந்த பின்னரே அவரால் பேச முடியும் என மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் மயங்க் அகர்வால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரஞ்சி சீசனில் சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு இப்படி நடந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

read more at

கேலோ இந்தியா: தமிழகம் 2-ஆம் இடம்

Mallinithya Ragupathi | 1 February 2024


கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், தமிழகம் 2- ஆம் பிடித்தது. மகாராஷ்டிரா முதல் இடமும், ஹரியானா 3- ஆம் இடமும் பிடித்தது. கடந்த ஆண்டு எட்டாம் இடம் பிடித்த தமிழகம், இந்த முறை இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகம் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை பெற்றுள்ளது.

read more at

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் விஷ்ணு சரவணன் தகுதி

Mallinithya | 1 February 2024


உலக பாய்மரப்படகு சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் சர்வதேச லேசர் கிளாஸ் பிரிவு பந்தயத்தில் 11 பந்தயங்கள் முடிவில் மொத்தம் 174 புள்ளிகள் குவித்த இந்திய வீரர் விஷ்ணு சரவணன் 26-வது இடத்தை தனதாக்கினார். இதன் மூலம் ஆசிய அளவிலான ரேங்கிங்கில் முன்னிலை பெற்ற விஷ்ணு சரவணன் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

read more at

ஐவர் ஆடவர் ஹாக்கி: கால் இறுதி சுற்றில் இந்திய அணி தோல்வி

Mallinithya | 31 January 2024


16 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐவர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் நேற்று இந்தியா, நெதர்லாந்துடன் மோதியது. இதில்இந்திய அணி 4-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

read more at

கேலோ இந்தியா விளையாட்டு: 91 பதக்கங்கள் குவித்து தமிழகம் சாதனை

Mallinithya | 31 January 2024


கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 12வது நாளின் முடிவில் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா 149 பக்கங்களுடன் முதல் இடத்திலும், ஹரியானா 103 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், போட்டியை நடத்தும் தமிழகம் 91 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. கேலோ இந்தியா வரலாற்றில் தமிழகம் அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் நடந்த கேலோ போட்டியில் அதிகபட்சமாக தமிழகம் 88 பதக்கங்கள் குவித்திருந்தது.

read more at

திட்டமிட்ட சதி.. மயங்க் அகர்வாலை கொலை செய்ய முயற்சியா?

Mallinithya | 31 January 2024


மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணி திரிபுரா சென்று அங்கு அவர்களை வெற்றி பெற்றது. பிறகு தனது அடுத்த லீக் ஆட்டத்தில் விளையாட செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது மயங்க் அகர்வால் செயலில் மாற்றம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் விமானத்தில் தனது சீட்டிற்கு முன் இருந்த பாட்டில் தண்ணீரை அருந்தியிருக்கிறார். அது அமிலத்தன்மை உடைய தண்ணீர் என தெரியவந்துள்ளது. இது எப்படி விமானத்திற்குள் வந்தது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

read more at

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜா விலகல்

Mallinithya | 30 January 2024


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான், சவுரப் குமார், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2-வதுடெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. ஏற்கெனவே விராட் கோலி முதல் இரு போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. தற்போது கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

read more at

வாலிபால் லீக் போட்டி - சென்னையில் 15-ந் தேதி தொடக்கம்

Mallinithya | 30 January 2024


3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.பி.எல். பாணியில் உள்நாட்டு வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து களம் காண்பர். இதில் ஒன்பது அணிகள் கலந்து கொள்வர். நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

read more at

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணிக்கு பின்னடைவு

Mallinithya | 30 January 2024


இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் 2 முதல் 4-வது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை ஆகியவை 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

read more at

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி

Mallinithya | 29 January 2024


15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்ற இந்திய அணி ஏற்கனவே சூப்பர்சிக்ஸ் சுற்றை எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிக்சின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

read more at

கோலிதான் எனக்கு ரோல் மாடல்.. பொறாமையுடன் பாராட்டிய ரோஹித் ஷர்மா

Mallinithya | 29 January 2024


நேற்றைய ஆட்டம் துவங்குவதற்கு முன், கிரிக்கெட் வர்ணனையாளர் கேட்ட கோலி குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா கூறியதாவது பிட்னெஸ் விஷயத்தில் கோலிதான் எனக்கு ரோல் மாடல் கோலி அந்த அளவுக்கு கிரிக்கெட்டை விரும்புகிறார், காதலிக்கிறார். கோலி இன்றுவரை தனது பிட்னஸை சிறப்பாக கவனித்துக் கொள்கிறார். கோலியின் பேட்டிங் டெக்னிக்கை கற்றுக்கொள்ள விரும்பும் இளம் வீரர்கள், கிரிக்கெட்டை கோலி எவ்வளவு நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.

read more at

கே.எல்.ராகுல், ஜடேஜா அரை சதம் விளாசல்:

Mallinithya | 27 January 2024


இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 421 ரன்கள் குவித்தது. இதில் கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜா அரை சதம் அடித்தனர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

read more at

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறல்!

Mallinithya | 25 January 2024


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்துவீசி எதிரணியை மிரட்டினர். இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. தற்போது வரை இங்கிலாது அணி 47 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

read more at

குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா..? மேரி கோம் விளக்கம்

Mallinithya | 25 January 2024


குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் வீராங்கனை மேரி கோம் ஓய்வு முடிவை அறிவித்ததாக செய்தி வெளியானது. அதற்கு அவர் ஒலிம்பிக்கில் உள்ள வயது வரம்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் என்னால் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இருந்தபோதும், நான் எனது விளையாட்டைத் தொடர்கிறேன். நான் எனது உடற்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். எப்போது ஓய்வு பெறுவேன் என்பதை அனைவருக்கும் முறைப்படி தெரிவிப்பேன் என்றார்.

read more at

இந்தியா- இங்கிலாந்து முதல் டெஸ்ட்: ஐதராபாத்தில் நாளை தொடக்கம்

Mallinithya | 24 January 2024


இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் விராட் கோலி முதல் 2 போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

read more at

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி; நேற்றும் தமிழகம் 6 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தல்

Mallinithya | 24 January 2024


கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நேற்றைய போட்டியில் 5-வது நாளான நேற்றும் தமிழகம் 6 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல். பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் நடிகை நிவேதா பெத்துராஜ். நேற்றைய முடிவில் பதக்கப்பட்டியலில் மராட்டியம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

read more at

பிசிசிஐ விருதுகள் 2023:

Mallinithya | 23 January 2024


பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படுகிறது. அதே போன்று சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்படுகிறது.

read more at

IND vs ENG: முதல் இரண்டு போட்டிகளில் இருந்து கோலி விலகல்

Mallinithya | 23 January 2024


இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் இருந்து தாம் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், கோலியின் இடம் உறுதியாகவில்லை. இதற்காக தனியாக பயிற்சிசெய்ய, ஆலோசனைகளை பெறதான், கோலி இந்திய அணியில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலியின் 4-வது இடத்தில் புஜாராவை சேர்க்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

read more at

கேலோ விளையாட்டின் 4-வது நாளிலும் தமிழகம் தங்கப் பதக்க வேட்டை

Mallinithya | 23 January 2024


கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் நேற்று சென்னையில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே. ஸ்ரீமதி தங்கப்பதக்கம் வென்றார். மகளிருக்கான அணிகள் ஸ்பிரின்ட் பிரிவில் தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது. மேலும் மற்ற போட்டிகளில் தமிழகம் ஒரு வெள்ளிப் பதக்கமும் இரண்டு வெண்கல பதக்கமும் வென்றது.

read more at

ஓபன் பேட்மிண்டன் 2024: இறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி!

Mallinithya | 22 January 2024


இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. கடைசி செட்டை 21-18 என்ற நிலையில் தென் கொரியா ஜோடி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார்

Mallinithya | 22 January 2024


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

read more at

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26:

Mallinithya | 22 January 2024


பிசிசிஐயின் மூலமாக ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஐபிஎல் 2024 தொடர் ஆரம்பிக்கும் தேதியானது உறுதி செய்யப்படும். எனினும் மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

கேலோ இந்தியா விளையாட்டு: தமிழகத்திற்கு மேலும் இரு தங்கப்பதக்கம்

Mallinithya | 22 January 2024


கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் 3-வது நாளான நேற்று (ஜன: 21) தமிழகம் மேலும் இரு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. யோகாசனப் போட்டியில் தமிழக வீராங்கனை நவ்யா மற்றும் வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தின் அர்லின் தங்கப் பதக்கத்தை வென்றனர். 3-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 4 தங்கம், 2 வெண்கலம் என்று 6 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.

read more at

டி20 உலக கோப்பை: அணித் தேர்வில்.. இந்த வீரரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது:

Mallinithya | 20 January 2024


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்து ஐபிஎலுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்நிலையில் ''ஆப்கானிஸ்தான் தொடரில், தான் யார் என்பதை ஷிவம் துபே வெளிகாட்டி விட்டார் என டிராவிட் பேட்டி அளித்துள்ளார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு, ஷிவம் துபேவின் பெயரும் பரிசீலனையில் இருப்பது தெரிய வருகிறது.

read more at

பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

Mallinithya | 19 January 2024


“16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது. நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

read more at

ஊட்டியில் ‘2’ டிகிரி செல்சியசால் உறைபனி

Mallinithya | 19 January 2024


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் உறை பனி விழத் துவங்கியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது.

read more at

தேர்தல் நடந்தாலும் கவலையில்லை – இந்தியாவில் தான் ஐபிஎல், எந்த மாற்றமும் இல்லை

Raghu | 10 January 2024


இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்தாலும் இந்தியாவில் தான் ஐபிஎல் நடத்தப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்பட்டதாக தகவல் வெ

என் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டினார்- லலித் மோடி மீது பிரவீ

Raghu | 10 January 2024


நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை. டெல்லி அணிக்காக விளையாட விரும்பினேன்.

read more at

பீல்டிங் செய்த இந்திய வீரர் மரணம்.. பின்பக்கம் தாங்கிய பந்தால் விபரீதம்: எப்படி

Raghu | 10 January 2024


இந்தியாவில் மும்பையில் நடைபெற்ற உள்ளூர் லீக் போட்டியின்போது, பந்து பின்பக்க தலையில் தாக்கியதால், வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட்

read more at

23 வயதில் சிறை: பாலியல் வழக்கில் கிரிக்கெட்டர் சந்தீப் லமிச்சனேவிற்கு 8 ஆண்டுகள்

Raghu | 10 January 2024


பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சந்தீப் லமிச்சனேவிற்கு நேபாள் நீதிமன்றம் 8 ஆண்டுகள் ச

'ஆப்கானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலி இல்லை': டிராவிட் தகவல்

Raghu | 10 January 2024


விளையாட்டு: கோலி அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவார் என்றும், இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவா

தோனி காட்டும் பாதை: சிவம் துபே பெருமிதம்...

Mallinithya | 16 January 2024


இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.இதில் இந்திய 'ஆல்-ரவுண்டர்' சிவம் துபே அசத்தினார். முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 32 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் . இது குறித்து இவர் கூறியதாவது எனது பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு சென்னை அணி நிர்வகம், அதன் கேப்டன் தோனி முக்கிய காரணம் . கடைசி கட்டத்தில் 'பினிஷராக' பிரகாசிக்க, தோனி காட்டிய வழியில் பயணிக்கிறேன் என்றார்.

இந்திய அணியின் கீப்பர் யார்: இங்கிலாந்து தொடரில் எதிர்பார்ப்பு

Mallinithya | 16 January 2024


இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''பந்துகள் எகிறும் தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில்கீப்பர் பணியை ராகுல் செய்தார். இந்திய ஆடுகளங்கள் 'ஸ்பின்னர்'களுக்கு ஏற்றது. சுழன்று வரும் பந்துகளை சமாளிக்க 'ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்' தேவை.இரு டெஸ்ட் போட்டியில் கீப்பராக பரத் செயல்படுவார். ராகுல் 'பேட்டிங்' பணியை மட்டும் மேற்கொள்வார் என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்

Mallinithya | 16 January 2024


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி.வேகத்தில்' மிரட்டிய நியூசிலாந்தின் டிம் சவுத்தீ (4 விக்கெட்), சர்வதேச 'டி-20' போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலரானார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான கடைசி போட்டி:

Mallinithya | 17 January 2024


இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 தன்வசப்படுத்தியது.

read more at