முக்கிய செய்திகள்

ஜெர்மனியை தோலுரிக்கும் வெப்சீரிஸ்!

Mallinithya Ragupathi | 28 February 2024


நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Risqué Business: The Netherlands and Germany வெப் சீரிஸ் உலகம் முழுக்கவுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதில் ஆண் பெண் தொடர்பாக இத்தனை காலமாக இருக்கும் கருத்தாக்கங்களை உடைக்கும் காட்சிகள் உள்ளன. இப்படியும் கூட சில நாடுகளில் கலாச்சாரம் உள்ளதா என வாயை பிளக்க வைத்துள்ளது அந்த வெப் சீரியஸ்.

ரிப்போர்ட்டரை ஒருமையில் பேசிய திருநாவுக்கரசர்!

Mallinithya Ragupathi | 28 February 2024


திருநாவுக்கரசருக்கு காங்கிரஸில் எம்.பி சீட் கிடைப்பது கடினம் என கூறப்படும் நிலையில் அவர் பொதுவெளியில் அநாகரிகமாக முறையில் நடந்து வருகிறார். அந்த வகையில் தற்போது திருச்சியில் திருநாவுக்கரசர் செய்தியாளர் ஒருவரை பேச்சை நிறுத்துயா, கெட்டவார்த்தையில் பேசினால் தான் நீயெல்லாம் அடங்குவ'' என்பன உள்ளிட்ட ஏடாகூடா வார்த்தைகளால் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்தம்பித்தது ஈரோடு... ஜவுளி துறையை அதிரவிட்ட மத்திய அரசு 43 B(H)..

Mallinithya Ragupathi | 28 February 2024


ஈரோட்டையே இன்று ஸ்தம்பிக்க வைத்திருக்கும், புதிய வருமான வரி சட்டம் 43 B(h). இதன்படி, தங்கள் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்படும். அதற்கு வருமான வரியும் செலுத்த வேண்டும். இந்த சட்டமாற்றமானது, ஜவுளித்துறையை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஜவுளி கடைகள் முழுவதுமே அடைக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைதறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகரில் போதை பொருள் சாம்ராஜ்யம்.. சிக்கிய தமிழக கும்பல்..

Mallinithya Ragupathi | 27 February 2024


கடந்த வாரம் டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 50 கிலோ எடையிலான சூடோ பெட்ரின் என்ற போதை பொருள் சிக்கியது. மேலும் இந்த விசாரணையில் போதை பொருள் கும்பலை வழி நடத்துவது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என தெரியவந்துள்ளது. இவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

read more at

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Mallinithya Ragupathi | 27 February 2024


2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரைக்கும், நாளை தூத்துக்குடிக்கும் செல்ல உள்ளார்.

தமிழ்நாடு வரும் மோடி.. கருப்பு கொடியுடன் வரவேற்கும் காங்கிரஸ்!

Mallinithya Ragupathi | 27 February 2024


தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வது, தாக்குவது, மீனவர்களை சுட்டுக் கொல்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளது.

குப்பையில் பணம் சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி..

Mallinithya Ragupathi | 26 February 2024


முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது பயோ கேஸ் தயாரிப்பில் 50 க்கும் மேற்பட்ட கம்பிரஸ்ட் பயோகேஸ் (CBG) நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஆலைகளுக்கான மூலப்பொருட்கள் அதாவது கழிவுகள் குறிப்பாகக் கரும்பு சக்கைகளை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பல வருடங்கள் கழித்து அனுபவங்களை பகிர்ந்த செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி

Mallinithya Ragupathi | 26 February 2024


நிர்மலா பெரியசாமி செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது தனக்கு அதிக நெருக்கடிகள் வந்ததாகவும் அதில் ஒன்று நடிகர் சிவாஜி கணேசன் மரணச் செய்தி எனவும் கூறியிருக்கிறார். அப்போது தன் மனதை கல்லாக்கி கொண்டு என்னுடைய தலையில் இருந்த பூவை எடுத்து வைத்துவிட்டு நான் செய்தியை படித்து முடித்தேன் என தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

மீளாத்துயரில் மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

Mallinithya Ragupathi | 26 February 2024


இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டும் 24 ஆம் தேதி முதல் உண்ணாவிர போராட்டத்திலும் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று போராட்டத்தை கைவிட்டு ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

ஓவர்நைட்டில் மாஸ் காட்டிய சென்னை அசோக்நகர் போலீஸ்!

Mallinithya Ragupathi | 24 February 2024


வடபழனி பகுதியை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். உடனே அவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து ஒவர்நைட்டில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து ஆன் தி ஸ்பாட்டில் அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

பிப்.26-ல் சூமோட்டோ வழக்கில் தீர்ப்பு- அமைச்சர் ஐ.பெரியசாமி தப்புவாரா?

Mallinithya Ragupathi | 24 February 2024


வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்குகளில் தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்து தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த சூமோட்டோ வழக்கில் விசாரணை முடிவடைந்து நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

Mallinithya Ragupathi | 23 February 2024


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

பைஜு ரவீந்திரன் மீது லுக் அவுட் சர்குலர்.. ரவீந்திரன் குடும்பம் வெளியேற்றப்படுமா..

Mallinithya Ragupathi | 23 February 2024


இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான Byju's நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான பைஜு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு அமலாக்க துறை, மத்திய குடிவரவு பணியகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் இதில் ரவீந்திரன் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் ஆடரை சிதறடித்த இந்திய பவுலிங்... ரான் சேர்க்க போராடும் இங்கிலாந்து!

Mallinithya Ragupathi | 23 February 2024


இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்டில் இன்று தொடங்கியது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் பவுலிங்கில் மிரட்டி எடுத்தனர். தற்போது இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

சகோதரி த்ரிஷாவை தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுங்க.. காவல்துறைக்கு அண்ணாமலை கோரிக்கை

Mallinithya Ragupathi | 23 February 2024


அதிமுகவில் ஒன்றிய செயலாளரான ஏவி ராஜு 2019 ஆம் ஆண்டு த்ரிஷாவை அவதூறாக பேசினார். அதற்காக, ஏவி ராஜுவுக்கு நடிகை திரிஷா, இன்று (22-02-2024) வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் "த்ரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

கலைஞர் நினைவிடம் பிப்ரவரி 26ம் தேதி திறப்பு!

Mallinithya | 22 February 2024


சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை பிப்ரவரி 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்: பிப் 28 அடிக்கல் நாட்டு விழா

Mallinithya Ragupathi | 22 February 2024


தூத்துக்குடி மாவட்டம் குலசையில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் முதல்வர் முக ஸ்டாலினும் பங்கேற்க உள்ளனர். இது இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் ஆகும்.

ஓய்வுபெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பு வழங்குவதா? சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Mallinithya Ragupathi | 21 February 2024


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதிவாணன் ஓய்வுபெற்று 5 மாதங்கள் கழித்து வழக்கின் விரிவான தீர்ப்பை வழங்கியதை உச்சநீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஒரு நீதிபதி பதவி விலகிய பிறகு 5 மாத காலம் வழக்கின் கோப்பை வைத்திருப்பது முறைகேடான ஒன்றாகும். இதை எங்களால் அனுமதிக்க முடியாது. எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற பின்னர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழக்குகளை மறுபரிசீலனைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புகிறேம் என்று கூறி நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்தனர்.

சமண துறவி வித்யாசாகர் மகராஜ் முக்தி அடைந்தார்

Mallinithya Ragupathi | 19 February 2024


பிரசித்தி பெற்ற சமணத் துறவி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ் உண்ணா நோன்பு கடைப்பிடித்து நேற்று முக்தி அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சல்லேக்னா எனப்படும், உண்ணா நோன்பு வாயிலாக முக்தி அடைவது ஆன்மாவை சுத்திகரிக்கும் செயலாக கருதப்படுகிறது. இதனால் சல்லேக்னா வாயிலாக முக்தி அடைய வித்யாசாகர் மகராஜ் முடிவு செய்தார். எனவே, கடந்த மூன்று நாட்களாக அவர் உணவு தண்ணீர் அருந்தாமல் உன்னால் நோன்பு இருந்தார்.

read more at

ஆட்டம் காட்டும் வானிலை.. சம்மருக்கு முன்பே கொளுத்தும் வெயில்..

Mallinithya Ragupathi | 20 February 2024


தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட இன்று 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பறிலை 12-13 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ரயில்வேயில் வேலை.. 9 ஆயிரம் பணியிடங்கள்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..

Mallinithya Ragupathi | 20 February 2024


கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ரயில்வேயில் காலியாக உள்ள 9000 டெக்னிஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றோடு முடியும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்.. நாளை ஜாமீன் மனு மீதான விசாரணை.. அடுத்து என்ன?

Mallinithya Ragupathi | 20 February 2024


சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 21 முறை அவருடைய நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களாக இவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். இவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுவதால் அவருடைய நீதிமன்றக் காவல் 22 ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

ரஷ்ய அதிபர் புதினின் எதிரியான அலெக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்தார்

Ragupathi | 17 February 2024


மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ரஷ்ய அதிபருமான விளாடிமிர் புதினின் எதிரியுமான அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபயணத்திற்குப் பிறகு நவல்னி சுயநினைவை இழந்தார், உடனடியாக மருத்துவ பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

read more at

தமிழக வெற்றி கழகம்! எழுத்து பிழை விமர்சனத்தால் அப்செட்! கட்சியின் பெயரை திருத்த நடிகர் விஜய் முடிவு?

Mallinithya Ragupathi | 17 February 2024


கடந்த 4ஆம் தேதி விஜய் தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். கட்சி உதயமானது முதல் அந்த பெயர் குறித்து சிலர் விவாதங்களை முன் வைத்துள்ளனர். அதாவது வெற்றிக் கழகமா, வெற்றி கழகமா என கேட்டு வந்தனர். எழுத்து பிழை இருப்பதாக அறிஞர்கள் கூறுவதை நடிகர் விஜய் ஏற்றுக் கொண்டு கட்சியின் பெயரில் வெற்றிக்கு பக்கத்தில் க் என்ற எழுத்தை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்..

Mallinithya Ragupathi | 17 February 2024


வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகளின் போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது. இதனிடையே, இன்று ஹரியானாவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் சுங்கசாவடிகளை முற்றுகையிடுவோம் எனவும் யூனியன் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. போலீசார் டெல்லி எல்லையில் அதிக அளவில் குவிக்கபப்ட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழலே உள்ளது.

விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் விவசாயி, போலீஸ்காரர் மாரடைப்பால் பலி.. கண்ணீர் புகை குண்டு காரணமா?

Mallinithya Ragupathi | 17 February 2024


டெல்லியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதனால் விவசாயி ஒருவரும், போலீஸ்காரரும் மாரடைப்பால் மரணித்துள்ளனர். எனினும் கண்ணீர் புகை குண்டு வீசியதால் இவர்களுக்கு சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பா வந்ததா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒரே ஆண்டில் 85% சரிந்த ஸ்டார்ட்அப் முதலீடு! தமிழகத்தின் நிலை ரொம்பவே மோசம்

Mallinithya Ragupathi | 15 February 2024


ட்ராக்ஸ்ன் ஜியோ என்ற அமைப்பு மாநிலம் வாரியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு எந்தளவுக்கு நிதி கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் நிதி தான் மிகக் கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த 2022இல் தமிழகத்திற்கு 1.7 பில்லியன் (14 ஆயிரம் கோடி) நன்கொடையாகக் கிடைத்த நிலையில், இந்தாண்டு 85% குறைந்து அது வெறும் 255 மில்லியன் டாலராக (2 ஆயிரம் கோடி) உள்ளது.

ஆற்றில் சிக்கிய உடல்.. 8 நாள் போராட்டம்.. கலங்கவைக்கும் பதிவு..!

Alan klindan | 13 February 2024


இமாசல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்த, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சையது துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கிய அவரை கடந்த 8 நாட்களாக தேடிவந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் இப்போது கண்டுக்கப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

read more at

30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டி!

Mallinithya | 10 February 2024


71வது உலக அழகி போட்டி இந்தியாவில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என இன்று (பிப்ரவரி 10) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியை நடத்தியது.

'பாஜகவில் இணைந்த 14 அதிமுக எம்எல்ஏக்கள்' அண்ணாமலை போட்ட திட்டத்தால் பயனேதுமில்லையா?

Alan klindan | 9 February 2024


மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவினர் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்கு வங்கியை வலுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர். டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் முருகன் தலைமையில், 14 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். ஆனால், இவர்கள் பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் ‘ஆப்சென்ட்’ ஆனவர்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

read more at

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம்...

Mallinithya Ragupathi | 9 February 2024


கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்தியபிரதா சாகு இருக்கும் நிலையில், கூடுதலாக ஒரு தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுப்பது போன்ற பணிகளை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சென்னை பப்ளிக் ஸ்கூல், டிஏவி உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பதற்றத்தில் பெற்றோர்

Ragupathi | 9 February 2024


சென்னை பப்ளிக் பள்ளி, கோபாலபுரம் டிஏவி பள்ளி, கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி, பாரிமுனையில் செயிண்ட் மேரீஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் வித்யாஸ்ரம் ஆகிய பள்ளிகளின் ஈமெயில்களுக்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.ஒரே ஐபி முகவரியில் இருந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களை பெற்றோர் அழைத்து செல்லுமாறு எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப், போன் மூலம் கேட்டுக் கொண்டனர்.

read more at

'அந்த நேரத்துல இத சாப்புடவே கூடாதாமே..!' இறால் மீன் Lovers கட்டாயம் இத பாருங்க..!

Alan klindan | 7 February 2024


இறால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்னென்ன? கர்ப்பிணி பெண்கள் இறால் மீனை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்த முழு செய்தி தொகுப்பு

'3 சூட்கேஸ்கள் கண்டெடுப்பு' சைதை துரைசாமியின் மகன் உயிரோடு தான் இருக்கிறாரா?

Alan klindan | 8 February 2024


காரில் பயணம் செய்து விபத்துக்குள்ளான சைதை துரைசாமிமகன் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் கடற்கடை ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரு பேனா போதும் இந்த பழம் கெட்டே போகாது' இல்லத்தரசிகள் கட்டாயம் இத படிங்க..!

Alan klindan | 7 February 2024


பேனாவை வைத்து எழுத தானே முடியும், இத வச்சு எப்படி ஒரு பழத்தை கெட்டுப்போகாம வைக்க முடியும்னு நீங்க எல்லாம் யோசிக்கலாம்..! பேனாவின் உதவியுடன் வாழைப்பழத்தை விரைவில் கெட்டு போகாமல் வைக்கலாம் தெரியுமா. எப்படி என்று யோசிக்கிறீர்களா..? இது குறித்த வீடியோ ஒன்றை இல்லத்தரசி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

"பஞ்சுமிட்டாய் சாப்பிட்டால் கேன்சர் வருமா" உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறிய அதிர்ச்சி தகவல்!

Alan klindan | 8 February 2024


புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் விற்கும் பிங்க் நிற பஞ்சுமிட்டாயில் கேன்சரை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் ரோடமின்-பி (RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் விஷ நிறமியாகும்.

read more at

"KKSSR 10 ஆவது Pass.. 12 -வைத்து Faill.. சேகர் பாபு படிச்சது 10 ஆவது" - Annamalai

Alan klindan | 8 February 2024


"KKSSR 10 ஆவது Pass.. 12 -வைத்து Faill.. சேகர் பாபு படிச்சது 10 ஆவது" நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அமைச்சர்கள் 10 கூட படிக்கவில்லை, இவர்கள் நீட் தேர்வை பற்றி கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

"லேகியம் விற்பவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை" நக்கலாக தாக்கி பேசிய ஆர்.பி.உதயகுமார்

Alan klindan | 7 February 2024


" அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. அ.தி.மு.க-வை, அண்ணாமலை என்ன... ஆண்டவனால்கூட தொட்டு பார்க்க முடியாது லேகியம் விற்பவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை" என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்

read more at

'பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்' ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அதிர்ச்சி கொடுத்த உத்தராகண்ட்

Alan klindan | 7 February 2024


மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து நாட்டில் உள்ள அனைவருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. பொது சிவில் சட்டம் மசோதாவை நாட்டில் நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆகியுள்ளது.

விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த்;

Mallinithya Ragupathi | 5 February 2024


தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் அவர்களுடைய மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது என்றால் அது மிகையல்ல. தற்போது உணர்ச்சி பூர்வமான விஷயத்தை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்திருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் அவருடைய திரு உருவத்தை தனது கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். தற்போது இந்த காணொளி வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பள்ளிவாசல் திறப்புவிழா! ஊர் மணக்க பூ, பழ சீர்வரிசை கொண்டு சென்ற இந்துக்கள்!

Mallinithya Ragupathi | 2 February 2024


திருவாரூர் கடியாச்சேரியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் வெற்றிலைபாக்கு, பூக்கள், பழங்கள், இனிப்பு அடங்கிய சீர்வரிசையை கொண்டு வந்து விழாவை சிறப்பித்துள்ளனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "மத நல்லிணக்கம்தான் எங்களுக்கு முக்கியமானது" என்றனர். இந்த விழா திருவாரூர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் கட்சி பெயரை அறிவித்தார் (Tamizhaga Vetri kazhagam)!

Ragupathi | 2 February 2024


நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இன்று அவர் தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்துள்ளார். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.

read more at

நள்ளிரவில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைத்த ஜார்க்ண்ட் ஆளுநர்

Mallinithya Ragupathi | 2 February 2024


ஜார்கண்டில் இத்தனை காலம் முதல்வரா இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இதனால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இது ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை ஓரளவு தெளிவாக்கும் எனத் தெரிகிறது.

சன்டான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2024: இந்திய திரைப்படங்களுக்கு வெற்றி

Mallinithya | 29 January 2024


இந்த ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய விருதுகளை இரண்டு திரைப்படங்கள் வென்றன. முதல் படம் சுசி தலாதியின் கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் இப்படம் ஆடியன்ஸ் விருது மற்றும் ஜூரி விருதுகளை வென்றது. இது இமயமலையில் அமைந்துள்ள கண்டிப்பான உறைவிடப் பள்ளியில் நடக்கும் ஒரு கதை. இரண்டாவது படம் அனிர்பன் தத்தா, அனுபமா சீனிவாசனின் நாக்டர்ன்ஸ். இந்த ஆவணப்படம் ஜூரி விருதை வென்றது. இந்த ஆவணப்படம் இமாலயத்தை சுற்றியுள்ள பருந்து மற்றும் அந்துப்பூச்சிகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது.

read more at

ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்!

Mallinithya | 22 January 2024


அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், மிதாலி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அயோத்தி விழாவிற்கு வருகை தந்த சச்சின், ரஜினிகாந்த், முகேஷ் அம்பானி ஆகியோர் அருகருகில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், எம்.எஸ்.தோனி ஆகியோர் பலரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

நிர்வாணப்படுத்தி அடித்து சித்திரவதை! திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை...

Ragupathi | 19 January 2024


18 வயது பட்டியல் சமூக இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்திய பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

read more at

சிராவயல் மஞ்சு விரட்டில் 2 பேர் உயிரிழப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

Ragupathi | 17 January 2024


தமிழகத்தில் மஞ்சுவிரட்டை ஒட்டி இரு உயிர்கள் இன்று பறிபோயின. சிவகங்கை சிராவயலில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. பொட்டல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு இளைஞரும், 12 வயது சிறுவனும் காளை முட்டியதில் உயிரிழந்தனர். அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

read more at

இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிரடியாக கைது

Ragupathi | 17 January 2024


ரூபா 10,000 இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று நாரம்மல பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

read more at

ராமர் கோவில் கதவுகளை வடிவமைத்த தமிழ்நாட்டு கலைஞர்கள்!!

Mallinithya | 17 January 2024


ராமர் கோவிலுக்கு கதவுகளை செய்யும் தமிழ்நாட்டு கலைஞர்கள்.மாமல்லபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி,ரமேஷ் தலைமையிலான கைவினைக் கலைஞர்கள் குழு ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவில் கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட 44 கதவுகளையும் வடிவமைத்துள்ளனர்.ராமர் கோயில் கட்டுமானப் பணியில் உதவுவதற்காக, 20 பேர் கொண்ட குழு கடந்த ஆறு மாதங்களாக அயோத்தியில் தங்கியுள்ளது.

read more at

சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிந்த மக்கள் தொகை..

Mallinithya | 17 January 2024


60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் சீன மக்கள் தொகை குறைந்தது.சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.சீனாவில் இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் வயதானவர்கள் அதிகளவில் இருப்பார்கள். பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது சீனாவிற்கு நீண்டகால வளர்ச்சியை மந்தமாக்கும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சென்றது.இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

read more at

ஓபிஎஸ் உடன் கூட்டணி : டிடிவி தினகரன் பேட்டி

Mallinithya | 17 January 2024


செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பாட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.ஓபிஎஸ் உடன் கூட்டணி உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

read more at

“கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்” - பிரபாகரன் உருக்கம்

Mallinithya | 17 January 2024


‘‘கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்’’ என்று பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகி கார் பரிசு பெற்ற இளைஞர் பிரபாகரன் உருக்கம் இந்த கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறோம். உயிரை பனையம் வைத்து விளையாடுகிறோம். கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்.அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

read more at