உலகம்

இந்தியாவைப் போல சீன இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Mallinithya Ragupathi | 28 February 2024


சீன இறக்குமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளதைப் போல அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளனர். மலிவு விலையில் சீனா பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதனால், அவர்களுடன் போட்டியிட முடியாத சூழலில் அமெரிக்க உற்பத்தியாளர்கள் உள்ளனர். மேலும் சீன நிறுவனங்கள் வரி விலக்கு மூலம் நியாயமற்ற வகையில் அதிக பலனடைகின்றன. இவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்

read more at

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

Mallinithya Ragupathi | 27 February 2024


ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்தியர்களை உக்ரைனுடனான எல்லையில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து சண்டையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய சில இந்தியர்கள் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

read more at

பிரான்சின் தேசிய கொடி குறித்து அவதூறு கருத்து: துனிசிய இமாம் நாடு கடத்தல்

Mallinithya Ragupathi | 26 February 2024


துனிசியாவைச் சேர்ந்த இமாம் (மத போதகர்) பிரான்ஸின் மூவர்ணக் கொடி என்பது சாத்தானியம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் "தீவிரவாத சிந்தனை உள்ள இமாம் கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் நாடு கடத்தப்பட்டுள்ளார் எனவும் இதுபோன்ற நபர்களை பிரான்ஸில் தங்க அனுமதிக்க முடியாது” எனவும் பிரான்சின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

read more at

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம்

Mallinithya Ragupathi | 24 February 2024


அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவினை வெற்றிகரமாக தொட்டுள்ளது. அதுமட்டுமல்லாது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனத்தின் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

read more at

பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்

Mallinithya Ragupathi | 23 February 2024


ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனையை தலிபான் நிறைவேற்றியுள்ளது. ஆயிரக் கணக்கான பேர் மைதானத்தில் குழுமியிருந்த நிலையில் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. தலிபானின் இந்த செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

read more at

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

Mallinithya | 21 February 2024


அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தில் சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒருகுட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுபோல, மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளது.

read more at

தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய விடமாட்டோம்: இலங்கை தமிழ் மீனவர்கள் திடீர் ஆவேசம்

Mallinithya Ragupathi | 20 February 2024


கச்சத்தீவில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 3-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவிடமாட்டோம் என இலங்கை தமிழ் மீனவர்கள் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.2,650-க்கு சாப்பிட்ட நபர் ரூ.8.30 லட்சம் டிப்ஸ் வழங்கினார்: அமெரிக்க உணவகத்தில் சுவாரஸ்யம்

Mallinithya Ragupathi | 19 February 2024


அமெரிக்காவில் மிக்சிகனில் உள்ள ஒரு உணவகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர், உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 32 டாலர் (ரூ.2,650) மற்றும் டிப்ஸ் 10 ஆயிரம் டாலரை வைத்துச் சென்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்கும்போது என்னுடைய ஆத்ம நண்பர் இறந்து விட்டார் அவரது இறுதிச் சடங்குக்காகவே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன். நண்பரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்க விரும்பினேன்” என்றார்.

read more at

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Mallinithya Ragupathi | 19 February 2024


மியான்மரில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது வடகிழக்கு இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

read more at

காசா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படை - ஆக்சிஜன் துண்டிப்பால் 4 நோயாளிகள் பலி

Mallinithya Ragupathi | 17 February 2024


இஸ்ரேல் - ஹமாஸ் போர்: தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பு ஊடுருவி உள்ளதாகவும், அங்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருப்பதாகவும், இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவப் படையினர் மருத்துவமனைக்குள் புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டன, அதோடு மின்சாரமும், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் உதவியும் துண்டிக்கப்பட்டது இதனால் நான்கு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக காசா தெரிவித்துள்ளது.

read more at

நவல்னி மரணத்திற்கு நீதி கேட்டு வீதியில் இறங்கும் மக்கள்! போராட்டக்காரர்களுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்யா

Mallinithya Ragupathi | 17 February 2024


ரஷ்ய அதிபராக இருக்கும் புதின் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்தவர் அலெக்ஸி நவல்னி. இதனால் ஊழல் முறைகேடு வழக்கில் நவல்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் 2021 ஆம் ஆண்டு முதல் நல்வனி சிறையில் உள்ளார். இந்த நிலையில், சிறை வளாகத்தில் நேற்று நடைபயிற்சி சென்ற போது நவல்னி மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்தது. நவல்னி மரணத்திற்கு நீதி கேட்டு ரஷ்ய மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் எனும் தகுதியை ஜெர்மனியிடம் இழந்தது ஜப்பான்!

Mallinithya Ragupathi | 16 February 2024


உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும், இரண்டாவதாக சீனாவும் உள்ளன. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானும், நான்காவதாக ஜெர்மனியும் இருந்தன. இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது இடத்தை ஜெர்மனியிடம் இழந்துள்ளது ஜப்பான்.

read more at

யுஏஇ அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா, யுஏஇ இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து

Mallinithya Ragupathi | 14 February 2024


பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று அபுதாபி சென்றார். அந்த நாட்டு அதிபர் முகமது பின் சையது அல் நஹ்யானை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

read more at

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் கட்சி அழைப்பு:

Mallinithya Ragupathi | 13 February 2024


பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்-ன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அழைப்பு விடுத்துள்ள நிலையில் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி, பிஎம்எல்(க்யூ) ஆகியவை முன்வந்துள்ளன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தவிர்த்த மற்றவர்கள் அனைவரையும் இணைத்து கூட்டணி ஆட்சி அமைக்க பிஎம்எல்(நவாஸ்) கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பு இன்று(12-02-24) நடைபெற உள்ளது.

read more at

ராமர் கோயிலை விடுங்கப்பா.. அபுதாபி-யில் முதல் இந்து கோயில்.. பிப்.14 திறப்பு..!

Mallinithya Ragupathi | 12 February 2024


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயிலை கட்ட வேண்டும் என்பது அங்கு வசிக்கும் இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அந்நாட்டு அரசு அனுமதி அளித்து, அபுதாபியில் நிலத்தையும் ஒதுக்கியது. இதனை அடுத்து 2019 ஏப்ரலில் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி பாப்ஸ் (சுவாமி நாராயண் சன்ஸ்தா) கோயிலை திறந்து வைக்கிறார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை: 2024-ல் 6வது சம்பவம்

Mallinithya Ragupathi | 10 February 2024


அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் சந்தர் தனேஜா தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டில் இதுவரையில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6வது நபர் இவர்.

read more at

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு தாமதம்: முறைகேடு நடப்பதாக இம்ரான் கான் கட்சி குற்றச்சாட்டு

Mallinithya Ragupathi | 9 February 2024


பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தேர்தலையொட்டி அடக்குமுறைகள் இருந்த சூழலில் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் வாக்கினை செலுத்தி இருந்தனர். இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இப்போது அதன் முடிவை அறிவிப்பதில் முறைகேடு செய்வதாக தெரிகிறது என பிடிஐ தரப்பில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

read more at

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு தாமதம்: முறைகேடு நடப்பதாக இம்ரான் கான் கட்சி குற்றச்சாட்டு

Raghu | 9 February 2024


பாகிஸ்தான் நாட்டில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் முறைகேடு நடப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

read more at

பாகிஸ்தான் மக்களை வாட்டும் நீரிழிவு நோய்...

Mallinithya Ragupathi | 9 February 2024


உலகளவில் சுமார் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு படி, 2022 இல் பாகிஸ்தானில் 26.7% மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் பிரெஞ்சில் 25%, குவைத்தில் 24%, இந்தியாவில் 10%, அமெரிக்காவில் 10%, சீனாவில் 10%, இப்படி டயபடிஸ் கட்டுக்கடங்காமல் பரவி இருப்பது உலகெங்கும் பல சுகாதார அமைப்புகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு:

Mallinithya Ragupathi | 8 February 2024


அமெரிக்க நாட்டில் இந்தியாவை சேர்ந்த 23 வயதான முனைவர் பட்ட மாணவரான சமீர் காமத் உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் அந்நாட்டில் உயிரிழந்த எண்ணிக்கை ஐந்தாகி உள்ளது. திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

read more at

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: நேற்று இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்

Mallinithya Ragupathi | 8 February 2024


பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரிலும், அதே மாகாணத்தின் கிலா சைபுல்லா நகரிலும் குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பில் மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்குமேற்பட்டோர் படுகாயம் அடைந் துள்ளனர்.

read more at

இந்தியர்கள் ஈரான் செல்ல விசா தேவையில்லை

Mallinithya Ragupathi | 8 February 2024


இந்திய குடிமக்களுக்கான விசாவை ஈரான் அரசு பிப்ரவரி 4-ம் தேதி முதல் ரத்து செய்துள்ளது. புதிய விதிகளின்படி சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் 6 மாதங் களுக்கு ஒருமுறை விசா இல்லாமல் ஈரானுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் இவர்கள் அதிகபட்சம் 15 நாட்கள் வரை தங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

read more at

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு

Mallinithya Ragupathi | 6 February 2024


இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்ற்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

read more at

சிலி நாட்டில் பயங்கர காட்டுத் தீ

Mallinithya Ragupathi | 5 February 2024


தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன் சிலியில் பிப்ரவரி 2023 ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் 4,00,000 ஹெக்டேர் நாசமாகியது. அதில் 22க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதல் காரணமாக, காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகமாக ஏற்படுகின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

read more at

மே மாதத்துக்குள் இந்திய படைகள் வெளியேறும் - மாலத்தீவு அதிபர் உறுதி

Mallinithya Ragupathi | 5 February 2024


வரும் மே மாதத்துக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளராக அறியப்படும் முகம்மது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

read more at

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

Mallinithya Ragupathi | 3 February 2024


ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 85-க்கும் அதிகமான இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் ஜோர்டானில் நடந்த தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டத்தற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் எங்களுடைய பதில் தாக்குதல் இன்று தொடங்கியுள்ளது. இது எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

read more at

சர்வதேச ஊழல் குறியீட்டு பட்டியலில் 93-வது இடத்தில் இந்தியா

Mallinithya Ragupathi | 2 February 2024


உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பிடித்துள்ள இடம் 93. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா இந்தப் பட்டியலில் 85-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் டென்மார்க், தொடர்ந்து 6-வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, பின்லாந்து இரண்டாவது இடத்தையும், நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

read more at

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் 'அரசியல்' சகாப்தம்?

Mallinithya Ragupathi | 2 February 2024


அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த நிலையில், தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். வரும் பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்தடுத்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது..

read more at

மூளைக்குள் சிப்...எலான் மஸ்க் டெலிபதி செய்யும் ஆச்சரியங்கள்!

Mallinithya | 31 January 2024


மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் ஒன்றை வைத்து, அதன் மூலம் கம்ப்யூட்டர், மொபைல் போன் உள்ளிட்டவற்றை இயக்கும் வகையில் எலான் மஸ்க் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இது வெறுமனே மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு பாதிப்புகளுக்கு தீர்வு காணும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முதல்முறை அமெரிக்காவை சேர்ந்த நபரின் மூளையில் சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

read more at

உலகில் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் மழையே பெய்யாதாம்.. ஏன் தெரியுமா?

Mallinithya | 31 January 2024


ஏமன் நாட்டின் தலைநகர் சனாவின் மேற்கில் உள்ள மனாக் ஹராஜ் பகுதியில் அல்-ஹுதைப் என்ற கிராமம் உள்ளது. இங்கு இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கிராமம் மேகங்களுக்கு மேல் அமைந்துள்ளதே, இங்கு மழை பெய்யாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

Mallinithya | 31 January 2024


பாகிஸ்தானில் 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் தோஷ்கானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்நாட்டு பணத்திற்கு 787 மில்லியன் (சுமார் 23 கோடி) அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

read more at

வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை ஜெர்மனியில் புதிய ஏற்பாடு

Mallinithya | 31 January 2024


பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை திட்டத்தை ஜெர்மனி அறிமுகம் செய்துள்ளது. இது அடுத்த 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஊழியர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும். விரும்பியதை செய்ய முடியும். புத்துணர்ச்சி பெறுவார்கள். மீண்டும் பணிக்கு திரும்பும் போது முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து உற்பத்தி திறனை மேம்படுத்துவார்கள் என்று நம்புகின்றனர்.

read more at

மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!

Mallinithya | 30 January 2024


மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. மாலத்தீவு அண்மைக்காலமாகவே இந்தியாவுடன் விரோத போக்கை கையாள்கிறது. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஏராளாமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மேலும், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்...தோண்ட தோண்ட வந்த 67 எலுப்புக்கூடுகள்

Mallinithya | 29 January 2024


ரோமில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ ஏற்பாடு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஷாக் மேல் ஷாக் ஏற்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவ இடத்தை தோண்டியபோது அதில் இருந்து 67 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. மேலும் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த தோல் செருப்புகள் அனைத்துமே எலும்புக்கூடுகளோடு சேர்ந்து கிடைத்துள்ளன. இது இவர்களின் செல்வத்தையும் அந்தஸ்தையும் பிரதிபலிக்கிறது என்று கூறுகின்றனர். இது தொடர்பாக பல ஆராய்ச்சிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

read more at

இஸ்ரோல் போர் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Mallinithya | 27 January 2024


இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர், மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. அதில், இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கக்கூடாது எனவும் காசாவில் இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

read more at

அயோத்தி ராமர் கோவில் பற்றி இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

Mallinithya | 25 January 2024


இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(OIC) அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த தனது அறிக்கையில், பாபர் மசூதி போன்ற முக்கியமான இஸ்லாமிய தளங்களை அழிக்கும் இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

read more at

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்:

Mallinithya | 25 January 2024


அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்புயல் காரணமாக பல பகுதிகளில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் வானிலை காரணமாக மட்டும் நாடு முழுவதும் 92 இறப்புகள் பதிவாகியிருப்பதாக சிபிஎஸ்(CBS) செய்தி ஊடகம் கூறியுள்ளது.

read more at

ராமர் கோவில் திறப்பிற்கு பாகிஸ்தான் கண்டனம்!!

Mallinithya | 23 January 2024


பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் திறக்கப்பட்டிருப்பதை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தில் நீண்ட காலத்துக்கு ஒரு கறையாக இருக்கும். மேலும் இடிக்கும் ஆபத்தில் வாரணாசியின் ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி இத்கா உள்ளிட்ட மசூதிகளின் பட்டியல் அதிகரித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவு துறை அறிக்கை.

read more at

சீனாவில் நிலநடுக்கம்: டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்

Mallinithya | 23 January 2024


சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி - என்சிஆர் வரை உணரப்பட்டுள்ளது.

read more at

பச்சை நிற மணல் கொண்ட ஹவானா கடற்கரை

Mallinithya | 20 January 2024


பசிபிக் பெருங்கடலில் இருக்கும் எட்டு தீவுக்கூட்டங்கள் தான் ஹவாய். இங்கு அதிசியமும் தனித்துவமும் நிறைந்த வித்தியாசமான கடற்கரை உள்ளது. அதன் பெயர் மஹானா பீச். சமீப காலமாக மஹானா பீச்சின் மணல் பச்சை நிறமாக இருக்கிறது. இந்த மணலில் ஒலிவின் என்ற மதிப்புமிக்க கற்கள் இருப்பதால்தான் இப்படி பச்சை நிறத்தில் இருக்கிறது. தற்சமயங்களில் இந்த கடற்கரையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

read more at

இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.. மாலத்தீவுகள் சுற்ற

Raghu | 10 January 2024


மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து பேசியது பெரும் சர்ச்சையான நிலையில் அந்நாட்டு சுற்றுலாத் தொழில் துறையினர் இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள

read more at

ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை..

Mallinithya | 17 January 2024


பாகிஸ்தானைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பாலோசிஸ்தானில் இருவர் உயிரிழந்த நிலையில்,இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இந்தத் தாக்குதல் அப்பாவிக் குழந்தைகள் இருவர் இறந்துள்ளனர். சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இது சிறிதும் ஏற்க முடியாதது. இதற்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்துள்ளது பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம்.

read more at

மொசாட் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

Mallinithya | 16 January 2024


ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பு ஈரானுக்கு எதிராக உளவுத் தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது.ஈரானின் பாதுகாப்புப் அமைப்புகள் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “சிரியா மற்றும் ஈராக்கில் ஈரானுக்கு எதிராக உளவு வேலைகளை செய்துவந்த இஸ்ரேலுக்குச் சொந்தமான மொசாட் உளவு அமைப்பின் தலைமையகத்தை தாக்கி அழித்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

read more at

இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்!!

Mallinithya | 17 January 2024


மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்த நகரம் இந்தியாவிற்கு அருகில் உள்ளதால் இந்தியாவும் இந்த புதிய கிளர்ச்சி இயக்கத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.பிப்ரவரி 2021-இல், மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

read more at